பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ : தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இது, வாயில் வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது.

'கூர்முண் முள்ளி' என்னும் (26) அகப்பாட்டு ஆற்றாமை வாயிலாகச் சென்று.ழித் தடையின்றிக் கூறியவாறு

மாறாப் புண்டோன் மாற்றச் சீற்றங் கனற்றப் பின்னும் புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாக யான் நோமென்னவும் பொல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க.

'பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி" (கலி. 79) எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க.

"நாடிநின் று.ாதாடித் துறைச்செல்லா ளுரவர் ஆடை கொண் டொலிக்குநின் புலத்திகாட் டென்றாளோ கூடியார் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியா ரெறி தர வொளிவிட்ட வரக்கினை. (கலி. 72)

இஃது ஆடை கழுவுவாளை வாயிலென்றது.

பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனாற் கொள்க.

கிழவோள் செப்பல் கிழவது என்ப-இப் பத்தொன்பதுங் கிழவோளுக்கு உரிமையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்ற வாறு. முன்னர் நின்ற ஏழனுருபுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன்கண்ணுந் தலைவி செப்புதலை வாயிலின் வகையோடே கூட்டிக் கிழவோள் செப்பல் வாயிலின் வருஉம் வகையொடு தொகை_இ என மாறு க. (6)

ஆய்வுரை : இது, தலைவனை மணந்து வாழும் மனை வாழ்க்கையில் தலைமகள் கூற்று நிகழுமிடங்களைத் தொகுத்துக் கூறுகின்றது.

1. 'யான் ஓம் என்ன வும் ஒல்லார் என வலிதிற்கடியவாறு காண்க: என் திருத்தல் வேண்டும். ஓம் . ஒ வும், விலகுவீராக. என்னவும் என் றுயான் கூறவும்

ஒல்லார் . அதற்கிசையார், எனப்பொருள் கொள்ளுதல் வேண்டும்.