பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு

( இ-ள்) தலைமகனது நினைவினைத் தலைவி மிகவும் அறிவாளாதலின் அவனை ஆர்வமுடன் வரவேற்குமிடத்தும், தன்னை அணுகாதவாறு நீக்கி நிறுத்துமிடத்தும், மனையற வுரிமையைத் தந்த தலைவனிடத்து அவனது பெருமையை மதித் தொழுகலில் தவறாத அன்புமீ தூர்தர் கண்ணும், தலைவனைத் தலைவி பிரிந்து தனிமையுற்ற வருத்தம் பெரிதாக லின் மனச் சுழற்சி பெருகிய காமத்தின் மிகுதிக் கண்ணும், இன்பமும் துன்பமும் தன்யால் ஒருங்கே தோன்றிய நிலையினும், புதல்வன் பிறநத நிலையில் நிகழ்த்தப் பெறும் விரும்பத்தக்க நெய்யாடல் விழாவிற் கலந்து கொள்ளவிரும்பி வந்த தலைவனை நெஞ்சு புண் படுமாறு செய்து தன்னொடு கூடுதலை விலக்கிய தாழவுற்ற நிலையிலும், விரும்பியவுள்ளத்துடன் புதிய பெண்டிரின் நலத்தின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவனைத் தனது தனிமைத துயரினை நன்கு அறிவித்து அவன்பாற் செல்கின்ற தனது நெஞ்சினை அவன்பார் செல்லுதலினின்றும் மீட்டுச் சுருங்கச் செய்து அவனாற் காதலிக்கப் பட்டாரை எதிரிலே தோன்ற உருவகஞ் செய்து புணர்ச்சியை மறுத்த அன்பின் பக்கத்தும், பரத்தையர்பால் தங்கிய புறத்தொழுக்கமுடைய தலைவனை வணங்கி நினது வேட்கையை என்ப்ால் உரையாது என் தங்கைய ராய பரத்தையர்க்கு உரைப்பாயாக என இரந்து வேண்டுதற்கண் னும், தவைவன் தன்னை விட்டு நீங்காநிலையின னாகிய காலத்து (நின்னாற் காதலிக்கப் படும் புறப்பெண்டிர்பார்) செல் வாயாக என விடுத்தற் கண்ணும் , (தலைவனது அன்புக்குரிய எாா கிய) காமக்கிழத்தி தலைவியாகிய தான் பெற்ற குழந்தையை அன்புடன் தழுவி இன்பமுற விளையாடும் விளையாட்டின் முடிவிலும், சிறந்த அன்பின் செய்கை புலப்படும் அவ்விடத்துத் தலைவன் தோன்றி மனையரத்தை விரும்பிய நெஞ்சத்துடன் தான் வந்த செயலைத் தலைவி யறியாதவாறு புறத்தே அணைந்து நின்று தலைவியா லுளதாகிய ஊடலைப் போக்க வேண்டிய இடத்தும், அந்நிலையில் தந்தையரைப் பண்பினாலும் செயலினாலும் ஒப்பர் அவர்தம் மைந்தர் என உலகம் கூறுதலால் முடிவில்லாத சிறப்பினையுடைய மகவைத தந்தையொடு சார்த்திப் பழித்துரைக்கு மிடத்தும், கொடுமையுடையாரது கொடுந்தன்மை அவரையே பின்னர்ச்சுடும் என்னும் பழமொழியை யுளத்துட்கொண்டு தன் துன்பத்தினையெண்ணித் தளராது தலைவரது நற்புகழை விரும்பியவர்களது சொல்லோடு பொருந்திக் கணவனொடு