பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா எ శ్రీ#á

அன்புறுதற்குத் தக்கவற்றைக் கூறுதலே தலைமகன் இயற்றுந் தொழிற்கு அஞ்சும் அச்சமாகும் என்றவாறு,

எனவே புணர்ந்துடன் போகாத தலைவி அங்கனமிருந்து கூறல் தலைவற்கு அவன் செய்வினைக்கண் அச்சமாகாதென்றவாறு.

'கான யானை தோல் நயந் துண்ட பொரித ளோமை வளிபொரு நெடுஞ்சினை

அலங்க லுலவை யேறி யொய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்த நண்ணிய அகிகுடிச் சீறுார்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லே மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே...' (குறுந் 79)

இதனுள் அஞ்சியவாறு காண்க. பிறவுமன்ன. (எ)

- நச்சினார்க்கினியம் : இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ - ள். புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து களவுக் காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக்காலத்து இல்லின் கண் இருந்து; இடைச்சுரத்து இறைச்சி யும் அன்புறுதக்க வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே. தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப்பொருள்களையுந் தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத்தக்க கருப்பொருளின் தொழில்களையும் கருதிக் கூறுதல் தானே: கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும் தலைவன் எடுத்துக்கொண்ட காரியத் திற்கு முடித்தலாற்றான்.கொலென்று அஞ்சும் அச்சமாம்"

(எ று, !

1. கிழவோன் செய்வினைக்கு அச்சம்' என்றது, 'தலைவன் தான் மேற்கொண்ட காரியத்தின்ை முடித்தலாற்றான் கொல்லோ' எனத் தலைவி அஞ்சும் அச்சத்தினை.