பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் பொருளதிகாரம்

கற்பியல்

க. கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

என்பது சூத்திரம்,

இலம்பூரணம் : இவ்வோத்து என்னபெயர்த்தோ வெனின், கற்பியல் என்னும் பெயர்த்து, கற்புக்கு இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். கற்பென்பது யாதோவெனின், அஃதாமாறு இச்சூத்திரத்தில் விளங்கும்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் கற்பிலக்கணம் கூறுதல் துதலிற்று.

(இதன் பொருள்) கற்பென்று சொல்லப்படுவது, கரணத் தொடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற்குரிய மரபினையுடையார் கொடுப்பக் கொள்வது என்றவாது.

கொளற்குரி மரபின்’ என்பதனைக் கிழத்தி’ என்பத னோடுங் கூட்டியுரைக்க.

களவின்கண் ஒத்தாரிருவர் வேட்கை மிகுதியாற் கூடி ஒழுகிய வழிக் கரணத்தின் அமையாது இல்லறம் நடத்தலாமோ எனின், அஃதாகாதென்றற்குக் கரணமொடு புணர’ என்றார். கரணம் என்பது வதுவைச் சடங்கு. கொளற்குரிய மரபிற் கிழவோன்' என்றதனால் ஒத்தகுலத்தானும் (உயர்ந்த குலத்தானும்) என்g