பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா அ ଶrtଣା:

இறைச்சி-கருப்பொருள் என்றது. இங்கு விலங்கு புள் முதலிய இயங்குதிணை யுயிர்களைச் சுட்டியது. வினை என்றது. மேற்குறித்த ஆணும் பெண்ணுமாகிய இயங்குதினையுயிர்களில் ஆண் தன் காதலுக்குரிய பெண்ணினை அன்பினாற் பேணுதலாகிய தொழிலைக் குறித்து நின்றது. கிழவோன்செய்வினை என்றது, தலைவன் மனைவியைப் பிரிந்து சேயிடைச் சென்று நிகழ்த்துதற்குரிய ஆள்வினைச் செயலை. அச்சம் என்றது. வினை மேற்கொண்ட தலைவன் தான் வினைமுடித்து வருமளவும் தன் மனைவி ஆற்றியிருக்க வல்லளோ என அஞ்சும் அச்சத்தினை யும், வினை வயிற் சென்ற தலைவர் நம்பாற் கொண்ட அன்பு காரணமாக நெடுநாள் நம்மைப்பிரிந்துரைத லாற்றாது வினை முடியாது இடையே திரும்பி விடுவாரோ எனத் தலைவி அஞ்சும் அச்சத்தினையும் குறித்துநின்றது. இஃது ஒப்பக் கூறல் என்னும் உத்தியின் பாற்படும். .

புணர்ந்து உடன்போகிய கிழவோள் மனையிருந்து இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறுதக்க கிளத்தல் எனவே, உடன் போக்கிற் செல்லாத தலைவிக்கு மனைக்கண் இருந்து இடைச்சுரத்துக் கருப்பொருள் வினை நிகழ்ச்சிகளையெண்ணிக் கூறும் வாய்ப்பு இல்லையென்பது பெறப்படும்.

அ. தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும்

ஆவயின் நிகழும் என்மனார் புலவர்.

இளம்பூரணம்: என் எனின், இதுவுமது. (இ.ஸ்) தோழியுள்ளிட்ட வாயில்களைப் போகவிட்ட அக்காலத்தும் முற்கூறிய நிகழுமென் றுரைப்பர் புலவர் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க. (அ)

1. ஆவயின்-கிழவோன்செய்வினையாகிய தொழில் கிகழும் காலமாகிய அவ்விடத்தின் கண்.

2. கிகழும் என்னும் பயனிலைக்கு மேற்குத்திரத்திற் குறிக்கப்பட்ட 'அச்சம்’ என்பது வருவித்துரைக்கப்படும்.