பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢfఙ. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நச்சினார்க்கினியம்: இது தோழி முதலிய வாயில் கட்கு எய்தாத தெய்துவித்தது.

(இ.ன்.) தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்: தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து அவனைச் செலவழுங்குவித் தற்குத் தோழி யுள்ளிட்ட வாயில்களைத் தலைவி போகவிட்ட அக்காலத்து அவர் மேலன போலக் கூறும் கூற்றுக்களும்: ஆவயின் நிகழும் என்மனார் புலவர்-தலைவி அஞ்சினாற்போல அவ் வச்சத்தின்கண்ணே நிகழுமென்று கூறுவர் புலவர். (எ-று.)

'அறனின்றி யயல்துாற்றும்’ (கலி.3) என்னும் பாலைக் கலியுள் இறைச்சியும் வினையுமாகிய பூ முதலியன கூறியவாற்றால் தலைவிக்கிரங்கி நீர் செலவழுங்குமெனக் கூறுவாள் யாமிரப்பவு மெமகொள்ளா யாயினை' எனப் பிற வாயில்களை யுங் கூட்டி

உரைத்தவாறு காண்க, (அ).

ஆய்வுரை: இது, தலைவன் மேற்கொண்ட வினைக்கண் அச்சம் விளைப்பது பிறிதொரு நிகழ்ச்சியும் உண்டென்கின்றது.

(இ-ள்) தலைவன் பிரிந்து சென்றானாக மனைக்கன் இருக்கும் தலைவி தனது ஆற்றாமை கருதித் தோழியுள்ளிட்ட வாயில்களைத் தலைவன்பால் தூதாகப் போகவிட்ட காலத்தும் அவ்விடத்துத் தலைவன் செய்யும் வினைக்கண் அச்சம் நிகழும் என்பர் புலவர் எ-று.

புகுப்பினும் என்புழி உம்மை, முற் கூறியவாறு அன்புறுதக்க தலைவி கிளத்தலேயன்றி வாயில்களைத் தலைவன்பால் தூதாகப்போகவிட்ட காலத்தும் எனப் பொருள்தருதலின் இறந்தது தழி இய, எச்சவும் மையாகும். புகினும் என்னாது புகுப்பினும், என்றமையால் புகுத்தற்கு வினைமுதல் தலைவி எனக் கொள்க.

க. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த

தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் அற்றமழி வுரைப்பினும் அற்றம் இல்லாக்

1. புகுத்தல்.தலைவன்பாற் போகவிடுதல்.