பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க | .

கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் அடங்கா ஒழுக்கத் தவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும்

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியுஞ்

சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேனா ஒழுக்கம் நாணிய பொருளினுஞ் சூள்வயின் திறத்தால் சோர்வுகண் டழியினும் பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் அவ்வழி: உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும் உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால்நின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எளிமைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலத் தெதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந்

தோழிக்குரிய என்மனார் புலவர்.

(பாடம்) புகற்சியுஞ் 2, சூள்நயத். 3, அவ்வயின்,