பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు? శ్రy தொல்காப்பியம் - பொருளதிகாரம்

காட்டுதற்கு ஏதுவான பொருட்பக்கத்தினும் கூற்று நிகழும் என்றவாறு.

'இது மற்றெவனோ............நமக்கே’’ (குறுந். வி.அக)

எனவரும்.

பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி இழைத் தாங் காக்கிக் கொடுத்தற்கண்ணும்’ என்பது-பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகன் மாட் டாக்கிக் கொடுத் தற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

'பகலில்............மகிழ்நநின் பெண்டே." (ஐங்குறு. ருஎ)

'கேட்டிசின்... .........நெஞ்சே' (ஐங்குறு. ருக)

என வரும்.

வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் என்பதுதாழ்ந்த இயல்பினையுடைய மொழியினான் வணங்குதற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. .

உண்டுறைப்.........கொளல்'(ஐந்திணையெழு, ருஉ) என வரும்.

அடங்கக்காட்டுதற்பொருளாவது, தலைவனுடைய குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு அடக்கமுடையளாய்த் தனக்குரிய இவ்வாழ்க்கைக் கடமை களை மேற்கொண்டு நிகழ்த்துதற்கு ஏதுவாக எடுத்துக்காட்டப்படும் பொருட் பகுதி. - - .*

2. பிழைத்து வந்திருந்த கிழவன்' என்றது, பரத்தமையாகிய விழை :பினைச் செய்து மனையின் கண் வந்திருந்த தலைவனை. நெருங்குதல்

இடித்துரைத்தல்

.ே இழைத்தலாவது, அவன் செய்த குற்றம் தேய்ந்து மறைய அவனைத் தலைவியின் தலையளிக்கு உரியனாகச் செய்தல். . ー 。

ஆக்கிக்கொடுத்தலாவது, பரத்தையருடன் அவன் கொண்ட தொடர் ைேன யகற்றித் தலைமகட்கேயுரியவனாகத் திருத்திக்கொடுத்தல்.

4. வணங்கியல்மொழி-வணக்கத்தைப் புலப்படுத்தும் இயல்புடையணிந்த மொழி. w