பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் تشي. 7{ة

'யாயாகியளே............கரப்பா டும்மே” (குறுந் கூ) என வரும்.

சூள் வயிற் றிறத்தாற். சோர்வுகண் டழியினும் என்பதுகலைமகன் குளுற்ற சூளுறவிற் சோர்வுகண்டு அழிந்து கூறினும் கூற்று நிகழும் என்றவாறு.

'எம் மணங்கினவே............சூளே" (குறுந். இங்) என வரும்.

பெரியோரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும்' என்பது-பெரியோ ரொழுக்கம் பெரி தாகுமெனச் சொல்லித் தலைமகளைப் பெறுந்தகைமை யில்லாத பிழைப்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. -

'வெள்ளிவிழுத்............உலகத் தானே (அகம்' 286) என வரும்.

அவ்வழி யுறுதகை யில்லாப் புலவியின் 2 மூழ்கிய கிழவோள் பால் நின்று கெடுத்தற் கண்ணும் என்பது-மேற் சொல்லிய, வாற்றாற் றலைவன் பிழைத்தவழி அவனா லுறுந்தகைமை பில்லாத புலவியின் மூழ்கிய தலைவி பக்கத்தாளா இ நின்று அதனைக் கெடுத்தற்கண்ணும் சுற்று நிகழும் என்றவாறு.

"மானோக்கி நீயழ நீத்தவன் ஆனாது

நாணில னாயின் நலிதத் தவன் வயின், ஊடுவ தென்னோ வினி' (கலி. அ)ை என வரும்,

1. 'பெறுதகையில்லாப் பிழைப்பு' என்றது, தனக்குரிய தலைவியைத் த ன் அடையப் பெறும் அன்புரிமையினையிழக்கும் றிலையில் தலைவன்:

மேற்கொண்ட பரத்தமையாகிய குற்றத்தினை.பிழைப்பு-குற்றம்.

2. உ. றுதகையில்லாப்புலவி: என்றது, தலைவன் தலைவியை ◌¤ £¤¡ .

தற்கு ஏ. லாதவாறு தலைமகளிடத்தே தோன்றிய பிணக்கம்,

புலவி புள் மூழ்குதலாவது, தன்னியல்பாகிய மென்மைப்பண்புகள் வெளிப் படிாதவாறு தான் கொண்டுள்ள புலவியாகிய பிணக்கமே மேற்பட்டுத் தோன்றுதல்,

தலைவன் பால் தலைவி கொண்ட பிணக்கத்தை நீக்கக்கருதிய தோழி தலைவன் பக்கம் சார்ந்து பேசாது தலைவிக்கே சார்புடையளாய்ப்பேசி அவளது புலவியைத் தனித்தற்குரியாள் எ ன்பார், புலவியுள்மூழ்கிய கிழவேள்பால் கின்று கெடுத்தற்கண்ணும் என்றார். கெடுத்தலாவது, தலைமகள் கொண்டுள்ள் புலவி யைத் தவிர்த்தல்,