பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ft

fr

கற்பியல்-நூற்பா சர்

t உணர்ப்புவயின் வாரா வூடலு ற்றோள் வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான் வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும். என்பது-தலைவன் ஊடல் தீர்க்கவும் அதன்வழி வாராத ஊடலுற்றோள்வயின் அவ்வூடலைத் தீர்த்தல் வேண்டிய தலைவன் பக்கத்தாளாகி நின்று தலைவனை வெகுண்டு நின்றுண் டாக்கிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்' (திருக்குறள் த்ங் எஉ.) என வரும். -

அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எளிமைக் காலத் திரக்கத்தானும்? என்பது -தாமரியராகிய களவு காலத்துத் தமது பெருமையைக் காட்டிய தாம் எளியராகிய கற்புக்காலத்து இரக்கத்தின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

பெருமைகாட்டிய விரக்கம் எனக் கூட்டுக. இதனாற் சொல் லியது, வாளாதே இரங்குதலன்றிப் பண்டு இவ்வாறு செய்தனை இப்பொழு திவ்வாறு செய்யாநின்றனை எனத் தமதுயர்ச்சியுந் தலைமகனது நிலையின்மையுந் தோற்ற இரங்குதலாயிற்று. இதுவும் புல விமாத்திரமன்றித் தலைவ னிங்கி யொழுகும் ஒழுக்கம் மிக்கவழிக் கூறுவதெனக் கொள்க,

‘'வேம்பின் பைங்காய்............அன்பின் பாலே' (குறுந் 195) என வரும்

1. உணர்ப்புவாபின்வாரா ஊடலாவது, தலைவன் தனது தவறின்மையைப் பலவாறு தலைவிக்கு உணர்த்தவும் தணியாத நிலையில் தலைமகள் கொண்ட பெரும் பிணக்கமாகும். இங்கிலையில் தலைவன் பக்கத்தளாய் கின்று தலைவிய்ை வெகுண்டுரைத்து அவளது தணியாத ஊடலைத் தணிவித்து அவ்விருவரையும் மனைவாழ்க்கைக் கடமையில் ஒன்று பட்டு வாழும் தகுதியினராகத் திருத்துதல் தோழிக்குரிய கடமையாம் என வற்புறுத்து வார்,

'உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோளவயின் உணர்த்தல் வேண்டிய

கிழவோன் பால் கின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதி' என்றார் ஆசிரியர்.

2. அருமைக்காலம-தலைமகன் தலைமகளை ள் ரிதிற் காணுதற்கியலாத களவுகாலம். எளிமைக் காலம்-தலைவியை எ க்காலத்தும் தன் மனையகத்துக்

கண்டு அளவளாவுதற்குரிய கற்புக் காலம்.