பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻。 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கொள்க. "கொளற்குரிய மரபிற் கிழத்தி யென்றதனால், ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க. 'கொடைக்குரிய மரபினோர்’ என்றதனால், தந்தையும் தாயும் தன்னையரும் மாதுலனும் இவரில்லாதவழிச் சான்றோரும் தெய்வமும் என்று கொள்க. கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவு வெளிப்படாத வழியும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப்புணர்ச்சியான் உரிமை பூண்ட வழியும் கொள்ளப்பெறும் எனக்கொள்க. களவியற் சூத்திரத்துள்,

'இன்பமும் பொருளு மறனு மென்றாங்

கன்பொடு புணர்ந்த” (களவியல். :)

என்பதனைத் தந்துரைத்து, ஐந்திணை மருங்கிற் கற்பெனப்படுவது எனக் கூட்டுக."

அஃதேல், கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண் வகையும் கொள்க. "கொடுப்போ ரின்றியும் கரண முண்டேபுணர்ந்துடன் போகிய காலை யான’ என்னும் இது கற்பாகுமோ எனின், அவையும் கற்பாதல் ஒக்குமேனும் கந்திருவம்போல ஒத்த அன்புடையார் ஆதல் ஒருதலையன்மையின் கைக்கிளை பெருந் திணைப்பாற்படும். ஈண்டு ஐந்திணை தழுவிய அகத்திணையே களவு கற்பு எனப் பகுத்தார் என்று கொள்க.?

1. 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கின்' என் முன்னர்த் தோற்றுவாய் செய்து கொள்ளப்பட்ட கன வியற் சூத்திரத் தொடரை ஈண்டுக்தந்துரைத்து, ஜக்திணை மருங்கிற் கற்பெனப் படுவது எனக்கட்டிப் பொருள் கொண்டு, ஈண்டு ஐக்தினை தழுவிய அகத் தினையே களவுகற்பு எனப் பகுத்தார் தொல்காப்பியனார் என இளம் பூரணர் தரும்

விளக்கம், !

"முற்படப் புணராத சொல்லின் மையிற்

கற்பெனப் படுவது களவின் வழித்தே' னைவரும் இறையனார் களவியலை அடியொற்றியமைந்ததாகும்.

2. அஃதேல் கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண்

வகையும் கொள்க. இவை கற்பாகுமோ எனின், அவையும் கற்பாதல் ஒக்குமேனும்

கந்திருவம் போல ஒத்த அன்புடையார் ஆதல் ஒருதலை யன்மையின் கைக் கிளை