பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ari) தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பாணர் கூத்தர் விறலிய ரென் றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் என்பது-பாணராயினுங் கூத்தராயினும் விறலியராயினும் இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறை புறும் வினைக் கெதிராகவுங் கூற்று நிகழும் என்றவாறு,

குறையுறும் வினை குறைவினை யென ஒட்டிற்று ; அது சொல்லிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று;

புலைமகன் ஆதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகல் எஞ் சேரிக் காணின் அகல்வய லூரன் நாணவும் பெறுமே” எனவும் ,

அணிநிறக் கெண்டை ஆடிடம் பார்த்து மணிநிறச் சிறுசிரல் மயங்குநம் பொய்கை விரைமல காற்றா விருந்தினம் யாமென முழவிமிழ் முன்றில் முகம்புணர் சேர்த்தி எண்ணிக் கூறிய இயல்பினின் வழா அது பண்ணுக்கொளப் புகுவ கணித்தோ பான செவி நிறை உவகையேம் ஆக இது நா னன்மைக் குரைத்துச்சென் ஹீமே

எனவும் வரும்.

நீத்த கிழவனை நிகழுமாறு படி இயர் காத்த தன்வயிற் கண் ணின்று பெயர்ப்பினும்? என்பது-தலைவியை நீத்த கிழவனை அவளுடன் நிகழுமாறு படுத்தல் வேண்டி அவனைப் புறங்காத்த தன்னிடத் துற்ற தலைமகனைக கண்ணோட்டமின்றிப் பெயர்த்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

மனையுறு கோழி. தெருவே' (குறுந் 139) என வரும்,

1. நிகழுமாறுபடி இயர்-கிகழும்படி செய்தல் வேண்டி. படி இயர்-செய்யியர்

என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.

2. கண் இன்று-கண்ணோட்டம் இன்றி, இன் றி என்னும் வினை யெச்சம் செய்யுளாதலின் இன்று எனத்திரிந்தது.