பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளல்உ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

வும், மேற்சொல்லப்பட்ட இடங்களிற் கூற்று வேறுபாடாகி வருவன வுங் கொள்க, அவற்றிற் களவுக்குங் கற்பிற்கும் பொதுவாகி வருவன அகத் திணையியலுட்கொள்க. கற்பிற்கே உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க.

"ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை

ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடும் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும்." (கைந்நிலை. க.அ)

இது நிமித்தங் கண்டு கூறியது.

"வாளிலங் குண்கண் வையெயிற் றோயே ஞாலங் காவலர் வந்தனர் - காலை அன்ன மாலைமுந் துறுத்தே.'

இது தலைவன் வந்தமை கூறியது. பிறவும் அன்ன. (சு)

நச்சினார்க்கினியம்: இது, முறையானே தோழிக்குரிய கூற் றுக் கூறுகின்றது.

(இ-ள்). (பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த தெறற்கு அரும் மரபிற் சிறப்பின்கண்ணும்) பெறற்கு அரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த-தலைவனுந் தலைவியுந் தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச் சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய தேறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் தனது தெறுதற் கரிய மரபு காரணத்தால் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறு மிடத்தும்; தோழி கூற்று நிகழும்.

தலைவியையுந் தலைவனையும் வழிபாடாற்றுதலின் தெறற் கரு மரபின்' என்றாா. தெறுதல்-அழன்று நோக்குதல். சிறப்பு,

1. “பெறற்கரும் பெ ரும்பொருள்” என்றது, பெறுதற்கு அரிது என கினைத்த பெரிய பொருளாகிய திருமணம். முடிதல்-கிறைவேறுதல். தெறற்கு அரும்மரபா வது களவொழுக்கத்திற் போன்று பெற்றோர்களால் வெகுண்டு: கோக்குவதற்கு

உரியதல்லாத மரபொடு போருந்திய மனை வாழ்க்கை.

2. சிறப்பு என்றது, தலைவன் இங்கிலை எய்து தற்குத் துணை செய்த தோழியைச் சிறப்பித்துக்கடறுதலை.