பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா தக iல்க

இவளை நீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன. அலை எம்பெருமானே அரிதாற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானும் நின் அருளால் இவள் ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்றானுங் கூறுவனவாம் .

'அயிரை பரந்த அந்தண் பழனத்து’’ X- (குறுந். 178)

இதனுண் முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரிய மாகிய காலத்து எங்கனம் ஆற்றினி ரென யான் நோவாநின் றேன். இங்கனம் அருமை செய்தலால் தேற்று தற்கு உரியேனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க

'பொங்குதிரை பொருத வார் மன லடைகரைப்

புன்கா னாவற் பொதிப்புற விருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கா லவைன் கொண்டகோட் கசாந்து கொள்ளா நரம்பி னிமிரும் பூசல் இரைதேர் நாரை யெய்திய விடுக்குந் துறைகெழு மாந்தை யன்ன விவள் நலம் பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய உனழயிற் போகா தளிப்பினுஞ் சிறிய ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் கட்கழி செருக்கத் தன்ன A. காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.’ (நற்றினை. 35)

இதனுள் தலைவி கனியாகவுந் தும்பி தோழியாகவும் அலவன் தன்மேல் தவறிழைக்குத் தமராகவும் தலைவன் இரை தேர் நாரையாகவும் உள்ளுறையுவமங் கொள்வு.ழித் தலைவி பொருட்டு யாய்க்கு அஞ்சி யொழுகினேனை நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு காண்க. பண்டும் இற்றே என்றது பண்டையின் மிகவும் வருந்தினாளென்றாள். இவள் கண் நீண்டு பசந்தது, களவின்கண் நீங்காது அளியாநிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள் அறு! உங்காலத்துப் பிறந்த வேறுபாடுபோலுங் காமவேறுபாடேர், அவ்விரண்டும் அல்லவே, இஃது ஒர் அமளிக்கண் துயிலப்பெற்றும் வேதவீதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்றோ?