பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்ச தொல்காப்பியம் - பொருளதிகார ம்

இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறென்னை என்றாளென் க.

அற்றம் அழிவு உரைப்பினும்-களவுக்காலத்துப்பட்ட வருத்தம் நீங்கினமை கூறினும் :

'எக்கர் ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை (ஐங்குறு. 148) 'எரிமருள் வேங்கை யிருந்த தோகை (ஐங்குறு. 294) என வரும்.

அற்றம் இல்லாக் கிழவோட்? சுட்டிய தெய்வக் கடத்தினும் களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின் அப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும்:

நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுவது தீர்க்க வெ மக்கெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே.'

'கிழவோற் சுட்டிய தெய்வக்கடம்’ என்று பாடம் ஓதி 'வாழி யாதன் வாழி பவினி' (ஐங்குறு. 6) என்பது உதாரணங் காட்டுவாரும் உளர்.”

சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்*

தலைமையுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்தகாலத்துத் தலைவன் அறஞ்செயற்கும் பொருள் செயற்கும் இசையுங் கூத்து

1. அற்றம்-வருத்தம். அழிவு-நீங்குதல்.

2. அற்றம் இல்லாக் கிழாவோள் - தன் கடமையிற் சோர் வில்லாத தலைவி. "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர் விலாள் பெண்' (56) எனவரும் திருக்குறள், அற்றமில்லாக்கிழவோள்' என வரும் இத் தொல் காப்பியத் தொடருக்கு அமைந்த விரிவுரையாகத் திகழ்தல் காண்க.

8. இளம்பூரணர்.

4. சீருடைப் பொருள் என்றது, தலைமையுடைய இல்லறத்தினை. மறத்தல் என்றது, தலைவன் தலைவியை மறக்தொழுகுதலை.