பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாம்சு தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நகைநன்றம் ம............ பெரிதே' (அகம், 346) கேட்டிசின்......நோமெ னெஞ்சே' (ஐங்குறு 59) எனவரும்.

வணங்கியன் மொழியான் வணங்கற்கண்ணும்-தாழும் இயல் பினையுடைய சொற்களால் தோழி தாழ்ந்து நிற்கும் நிலைமைக் கண்ணும் : -

'உண்டுறைப்.,,.........கொளல்’’ (ஐந். எழு. 54)

எனவரும். 'பகலிற் றோன்றும்...... பெண்டே' (ஐங்குறு. 57)

இதுவும் அதன்பாற்படும்.

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தைய ரிடத்தே உண்டாம் விளையாட்டினைத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சிக்கண்ணும் : >

விளையாட்டாவது யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலாம்.

பகுவாய் வரா அல்’ (அகம் 36)இதனுள் கொள்வாரார்ப்பினும் பெரிதெனவே2 நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க, -

சிறந்த புதல்வனை நேராது. புலம்பினும்-யாரினும் சிறந்த புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றுழி அவற்குந் தலைவி வாயில் நேராமல் தலைவன் வருந்தினும் :

"பொன்னொடு குயின்ற பன்மணித் தாலித் தன்மார்பு நனைப்பத் தன்றலையு மிஃதோ மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி

1. புறம்படு விளையாட்டு-பரத்தையரொடு தலைவன் புறம்போந்து விளையாடும் விளையாட்டு.

புல்லுதல்-பொருந்துதல். புகற்சி-விருப்பம்.

2. இதனுள் கொள்வா சார்ப்பினும் பெரிதெனவே: என்பது, இதனுள் வென்றி கொள்வீரரார்ப்பினும் பெரிதெனவே என்றிருத்தல் வேண்டும்.

. 8. நேராது-உடன்படாது. நேர்தல்-உடன்படுதல். தேராது: என்பது இளம்பூரணருரையிற் கண்ட் பாடம். -