பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா)அ தொல்காப்பியம-பொருளதிகாரம்

சூள் நயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியினும் : தயத்திறத்தாற் சூள் சோர்வு கண்டு அழியினும்-கூடுதல் வேட்கைக் கூறுபாட்டால் தான் குளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்மை யைக் கருதித் தலைவி வருந்தினும்: தோழிக்குக் கூற்று நிகழும் .

'பகல்கொள் விளக்கோ டிரா நா ளறியா

வென்வேற் சோழர் ஆமுர் அன்னவிவள்

நலம்பெறு சுடர் நுதல் தேம்ப

எவன் பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே.’’ (ஐங்கு று. 58)

(ଦ୍ଦ)

இதனுள் இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தருமெனத் தோழி

தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க.

காடுற நிவந்த’’ (அகம். 266) என்னும் மணிமிடை பவளத்தைத் தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர். '

(பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பினும்) பெரியோர் பெறுதகை இல்லாக் கிளந்துநன்மக்கள் பெறுந் தகைமை இல்லறமாயிருக்குமென்றுஞ் சொல்லி; பெரியோர் ஒழுக்கம். பெரிதெனக் கிளந்து பிழைப் பினும் - நன்மக்கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்கு மென்றுஞ் சொல்லித் தான் தலைவனை வழிபாடு தப்பினும் : தோழிக்குக் கூற்று நிகழும்.

பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டிடத் துங் கூட்டுக."

3. சூள்கயத்திறத்தாற் ச்ோர்வு என்பதனை கயத்திறத் தாற்சூள் சோர்வு: என மொழிமாற்றிப் பொருள் வரையப்பட்டது. கயத்திறம்-கயந்ததிறம்; கூடுதலை விரும்பிய வேட்கைக் கூறுபாடு. சூள்சோர்வு-தான் கூறிய சூளுறவினின்றும் வழுவிப் பொய்யனாகிய தன்மை,

2. கோடுறகிவந்த (அகநானூறு-266) என்ற பாடல் இளம்பூரணருரை யிற் காணப்படாமையால், இப்பாடலை உதாரணம்ாகக் காட்டிய வேறோருரை கச்சினார்க்கினியர் காலத்து வழங்கியதெனத் தெரிகிறது.

8. பெரியோர் பெறுதகை இல்லாக்கிளந்து பெரியோர் ஒழுக்கம் பெரி விதனக் கிளந்து, எனப் 'பெரியோர்’ என்பதனையும் கிளந்து என்பதனையும்