பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க 1ിക്

'வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை’ (அகம். 286)

இதனுள் அற னென்றது இல்லறத்தை; தற்றகவுடைமை நோக்கி யென்றது, தன்னால் அவ்வறனும் பொருளுந் தகுதிப் பாடுடையவாந் தன்மையை நோக்கி என்றவாறாம்; முன்னியது என்றது புறத்தொழுக்கத்தை; பெரியோரொழுக்க மனைய’ வென்றது. பெரியோர் ஒழுக்கம் பெரிய வென்றவாறு,

இது முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள்பற்றி நும்மனோர். மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம். அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங்காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு ஏற்குமாறுணர்க.

அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழ வோள் பால் நின்று கெடுத்தற்கண்ணும் - தலைவன் அங்ங்னம் பிறழ்ந்த இடத்து அவன் சென்று சேருந் தகைமை இல்லாமைக் குக் காரணமாகிய புலவியின் கண் அழுந்திய தலைவிபக்கத்தாளாய் நின்று அவள் புலவியைத் தீர்த்தற்கண்ணும் :

"மானோக்கி நீயழ நீத்தவ னானாது

நாணில னாயி னலிதந் தவன்வயின் ஊடு த லென்னோ வினி.’’ (கலி 37)"

"உப்பமைத் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னிள விடல்.” (குறள், 1302)

'காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி

வாலிழை மகளிர் மரீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.” (குறுந். 45)

(உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள் வயின் உணர்த்தல்

இரண்டிடத்துங்கட்டியும் . சொற்களை முன்பின்னர் க மாற்றியும் இத் தொடர்க்கு கச்சினார்க்கினியர் எழுதிய உரை பொருள் மாறுபாடில்லா' திருப்பினும் உரைமரபுக்கு ஒவ்வாததொன்றாம் என உணர்தல் வேண்டும். அழைத்தல் . தலைவனை வழிபடுதலில் தப்புதல்