பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

        1. ... #. தொல்காப்பியம்- பொருளதிகாரம்

வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்) உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்தலைவன் தெளிவிக்கப்படுந் தன் மைக்கணில்லாத ஊடல்

மிகுத்தோளிடத்து:

உணர்ப்புப் புணர்ப்புப்போல் நின்றது 2

உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று . ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன்வயத் தாளாய் நின்று; தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்-தான் தலைவியைக் கழறி அவள் சீற்றம் போந்தன்மை உண்டாக்கிய தகுதிக் கண்ணும்:

'துறைமீன்......... .. அறியா ரம்ம வஃ துடலு மோரே...'

(அகம். 316)

இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க.

(அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத் தானும்) எண்மைக் காலத்து - தாம் எளிய ராகிய கற்புக் காலத்திலே, அருமைக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும்-களவுக்காலத்துத் தமது பெரு மையை உணர்த்திய வருத்தத்தின் கண்ணும்:

'வேம்பின் பைங்காயென்’ {குறுந் . 196)

பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் - பாணருங் கூத் தரும் விறலியருமென்று சொல்லுகின்ற இம் மூவரும்; பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் - விரும்பிக்கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும்: கூற்று நிகழும்.

"எதிரு மென்றது அவர் வாயில்வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலுங் கூறியதாம்.

1. ஊடல் உற்றோள்-ஊடல் மிகுந்தோள். உறுதல்-மிகுதல்.

2. புணர்த்தல் என்னும் பொருளுடைய புணர்ப்பு என்னுக் தொழிற்பெயர் புேனர்க்கப்படும் தன்மை' என்ற பொருளைத் தந்தாற் போன்று, உணர்த்தல் என்னும் பொருளுடைய உணர்ப்பு’ என்னுக் தொழிற்பெயர், "உணர்த்தப்படுக் தன்மை எனப் பொருள் தந்து கின்றது.