பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற் வியல்-நூற்பா த 的富a一母

புலைமகனாதலின்...நானவும் பெறுமே ’’ இது பாணர்க்கு வாயின் மறுத்தது.

" விளக்கின்........... போர்வையஞ்சொல்லே' (நற்றிணை 310)

இது விறலிக்கு வாயின் மறுத்தது. மறுப்பாள்போல் நேர்வ வந்துழிக் காண்க.

(நீத்த கிழவனை நிகழுமாறு படிஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்) நீத்த கிழவனை-பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை; நிகழுமாறு படிஇதானொழுகும் இல்லறத்தே படுத்தல்வேண்டி, காத்த தன்மை யில்- புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையி னாலே, கண் இன்று பெயர்ப்பினும்-கண்ணோட்டமின்றி நீக்கினும்:

", மனையுறை கோழி......... தெருவே’’ (குறுந் 139)

இதனுள் அம்பலொடு வார லெனவே பன்னாள் நீத்

தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று கோழி

போலத் தாயர் மகளிரைத் தழி இக்கொண்டாரென்றலிற் புறம் போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று,

(பிரியுங் காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்) பிரியுங் காலை எதிர்நின்று சாற்றியதலைவன் கற்பிடத்தப் பிரியுங்கால் தெய்வத்தன்மையின்றி! முன் னின்று வெளிப்படக் கூறிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் முறையுடைத்தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக்கண்ணும்:

"எதிரும் என்ற உம்மை, எச்சவும் மை. ; பிற ஆவன

1. ஆறுபடிஇ இல்லறத்தேபடுத்தல் வேண்டி. ஆறு-இல்லறம்.

2. கண் இன்று-கண்ணோட்டம் இன்றி. இன்றியென்னும் வினையெச்சம் இன்று எனத்திரிந்தது.

3. உரையில் தெய்வத்தன்மையின்றி எ ல் பதற்குரிய குறிப்பு மூலத்தில் இல் லாமை சிங்திக்கத்தகுவதாகும்.

4. எதிர் என்பதற்கு "எ க்காலம் எனப்பொருள் கொண்டு, 'எதிரும்’