பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f: శ్రీడా தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இது, புதல்வற்பெற்றுழித் தலைவன் மனைக்கட்சென்ற செவி விக்கு அறத்தொடு நின்று வதுவைகூட்டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது.

வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என் மனார் புலவர் தோழிகூற்றாய்த் தலைவிகற்றினுள் அடங்குவ தன்றித் தோழிக்கே கூறத் தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவிகளெல்லாந் தோழிக்கு உரிய வென்று கூறுவர் புலவர் (எ . து. }

இச் சூத்திரத்துக்கண் ஏழனுருபும் அவ்வுருபு தொக்கு நின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரிய வென்னுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்னவிடத் தும் இன்ன விடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற் பித்து முடிக்க. } في يوليو

ஆய்வுரை : இது, கற்பின் கண் தோழி கூற்று நிகழும் இடங் களைத் தொகுத்துக் கூறுகின்றது.

(இ - ள்) பெறுதற் கரிய பெரிய பொருளாகிய திருமணம் நிறைவேரியபின் அமைந்த பிறரால் வெகுளுதற் கரிய மனை வாழ்க்கை மரபு காரணத்தால் தலைவனுக் குளதாகிய சிறப் பினைப் பாராட்டியுரைக் குமிடத்தும் , களவுக்காலத்துத் தாம் உற்ற இடையூறுகள் நீங்கிய திறத்தைக் கூறுமிடத்தும், தன் கடமைகளிற் சிறிதும் சோர்வில்லாத தலைவியைத் தலைவன் விரைந்து மனந்து கொள்ளுதல் குறித்துத் தான் வேண்டியவாறு தெய்வம் அதனை முடித்தமையால் தெய்வத்திற்குப் பரவுக் கடன் கொடுத்தல் வேண் டும் எனத் தலைவனுக்குக் கூறுமிடத்தும், புகழுடைய பெரும் பொருளாகிய மனை வாழ்க்கையினைத் தலைவியின்பால் வைத்த வழித் தலைவன் தன் கடமையினை மறந்தொழுகிய விடத்தும், புறத்தொழுக்கத்தையுடைய தலைவன் திரத்து மனம் வருந்தி ஊடிய கலைவியை அவளது ஊடல் தணிய எடுத்துக் காட்டுதற்குக் காரணமாகிய பகுதியிடத்தும், பரத்தமையாகிய குற்றத்தினைப் புரிந்து வந்திருந்த தலைவனை இடித்துக் கூறிக் குற்றந்திர்ந்த

1. "வகைபட வந்த கிளவி சன் அது, தோழி கூற்றாய்த் தலைவி கற்றினுள் அடங்குதலில் நித் தோழிகற்றாகவே கொள்ளத்தரும் சிறப்புரிமையுடைய கிளவி கலை என்பர் கச்சினார் க்க் கினியர்,