பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ர்பியல் - நூற்பா , ாஉடு

நிலையில் தலைவியின் அன்புக்குரியவனாக ஆக்கிக்கொடுக்கு மிடத்தும், பணிவினைப்புலப்படுத்தும் மொழிகளால் தலைவனை வணங்குதறுகண்ணும், புறத்தே சென்று பரத்தையரொடும் விளை யாடுதலைப் பொருந்திய தலைவனது விருப்பத்தின்கண் ணும் , மனை வாழ்க்கையில் அன்பு கூர் தற் சிறப்புடைய மகனைத் தலைவன் வாயிலாகக் கொண்டு சென்ற விடத்துத் தலைவி வாயில் நேராமை யால் தலைவன் தனிமையுற்று வருந்துமிடத்தும், தலைமகளிடத் தி லிருந்து நீ கொண்ட மாட்சிமை பொருந்திய நலத்தினை மீட்டுத் தந்து செல்வாயாக எனத் தலைவனை வேறுபடுத்துரைக்குமிடத் தும், தலைவனது பேணாவொழுக்கினையெண்ணி நாண முற்ற நிலையிலும், தலைவன் தான் செய்த சூளுற வினின்றும் பிழைத்த மையால் உளவாம் தீமையினையெண் ணித் தலைவி வருந்திய திலையிலும், பெரியோராயினாரது ஒழுகலாறு பெருமையின் கண்ணதாகும் என்று கூறித் தலைவியைப் பெறுந்தகையில்லாத வாறு தலைவன் செய்த பிழையினை எடுத்துக் கூறுமிடத்தும், மேற்சொல்லியவாறு தலைவன் தவறு செய்துழி அவனால் அணு குந்தன்மையில்லாத புலவியுள் அழுந்திய தலைவியின் சார்புடைய ளாய் நின்று அவளது புலவியை நீக்குமிடத்தும், தலைவன் தனது நிலையினையுணர்ததி ஊடல் தீர்க என வேண்டிக் கொள்ளவும் தணியாத ஊடலைத் தீர்த்தல் வேண்டிய தலைவனது சார்புடைய விளாய்த் தலைவியை வெகுண்டு நின்று அவளது ஊடல் தீர்த்து உண்டாக்கிய மனைவாழ்க்கை யமைதியாகிய தகுதியிடத்தும், காணுதற்கு அரிய களவுக் காலத்துத் தம் பெருமையைப் புலப்படுத் திய நிலையில் கற்புக் காலத்துத்தம் எளிமையைக் கூறி இரங்கு மிடத்தும் (தலைவியது ஊடல் தணிவித்தல் கருதி) பாணர், கூத்தர், விறலியர் என்னும் இவ்வாயில்கள் விரும்பிக் கூறிய குறை யிரத்தல்களுக்கு மறுமொழி கூறும் நிலையிலும், பரத்தமையினை மேற்கொண்டு தலைவியைக் கைவிட்ட தலைவனைத் தலைவி யுடன் மனையறமாகிய நன்னெறியில் ஒழுகச் செய்தல் வேண்டித் தலைவியைப் பாதுகாத்த தன்மையினாலே கண்ணோட்டமின்றிக் கடிந்துரைத்துப் பரத்தமைக் குற்றத்தினின்றும் தலைவனை மீட் டற்கண்ணும், தலைவன் சேயிடைப்பிரிவிற் (நெடுந் தூரப்பிரிவிற்) பிரிந்து செல்ல எண்ணிய காலத்து அவனுக்கு முன்னின்று கூறிய-உலகியலின் மாறுபடாத எதிர்மொழி உட்பட இன்னோ ரன்ன பிறவுமாகக் கூறுபட வந்த கிளவிகள் எல்லாம் தோழிக்கு உரிய என்று கூறுவர் புல ர் எ-று.