பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ) - 盈7&_@芷

வணிகர்க்கு வேளாண் குலத்திற் கொடுக்கப்பட்டாரும். வரை யப் பட்டார்-செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற் கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர், கன்னியில் வரையப் பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற் பட்டனர். பரத்தையராவார் யாரெனின், அவர் ஆடலும் பாட லும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார். இவருள்ளும் ஒருவரைப் பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்திக் கூறுவனவும் காமக் கிழத்தியர் கூற்றின்பாற் படும். இவற்றின் வேறுபாடு அவரவர் கூற்றானறிக. இச்சூத்திரத்திற் காமக்கிழத்தியென ஒதாது * கிழத்தியர்’ என ஒதுதலானும் பலவகையார் என்பது கொள்க.

புல்லுதன் மயக் கும் புலவிக்கண்ணும் என்பது-புல்லு தலைக் கலக்கும் புலவிமாட்டுங் காமக்கிழத்தியர் கூற்று நிகழும் என்றவாறு, -

அஃதாவது முதிராத புலவிமாத்திரமாகிய புணர்ச்சியை யுடன் பட்ட நெஞ்சத்தளாதல்.

'பொது மாழி.........ஐய எமக்குநின் மார்பு.’ (கலித் 58) இது மூவகையார்க்கும் பொது. -

இல்லோர்’ செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் என்பது-மனை யகத்தோர் செய்த வினையை யிகழ்ந்து கூறு தற்கண்ணும் என்றவாறு. - -

1. தலைவியை மணந்துகொண்ட பின்பு தலைவனால் வேட்கை கார ண மாக மணஞ்செய்துகெ: ஸ்ளப்படும் மகளிர் காமக் கிழத்தியராவர். தலைவன் குலத்தோடு ஒத்த குலத்திற்பிறந்தவளும், அவனது குலத்திலும் தாழ்ந்த குலத்திற் பிறக்தவளும், பரத்தையரில் தலைவனால் வரைந்துகொள்ளப் பட்டவளும் sা চলা এ, காமக்கிழத்தியர் முத்திறப்படுவர் என்பதும், ஆடலும் பாடலும் வல்லாராகி அழகும் இளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் க்கும் உரிமை பூனா தாராய் வாழும் பொதுமகளிர் பரத்தையர் எனப்படுவர் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும்.

2. மயக்குதல்-கலத்தல், புல்லுதலைக்கலக்தபுல வி. எனவே, தலைவ னொடு புணர்ச்சியையுடன் பட்ட கெஞ்சத்தள் ஆகிய கி ைல் பில் கொண்ட முதிராத பிணக்கமாதல் பெறப்படும்.

3. இல்லோர்-மனையின் கண் வாழ்வோல் : என்றது தலைவியையும்

தலைவனையும்.