பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் بقلم سنة 3#

பன்மையால் தலைமகனை பிகழ்தலுந் தலைமகளை யிகழ்தலுங்கொள்க.

'கழனிமாஅத்து ........புதல்வன் தாய்க்கே’’ (குறுந். 3) என்றும், -

" நன் மரங் ......... யாடியாரே' - (அகம். 165) என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன.

அளியர் தாமே.........பெரும்பேதையரே'

எரியகைத் தன்ன.........அலைஇயர் தன்வயிறே'.(அகம் 106)

இவை பரத்தை கூற்று.

  • பல்வேறு புதல்வர்க் கண்டுநணி புவப்பினும் என்பது-பல வகைப் புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து கூறியவழியு மென்றவாறு. -

'நயந்தலை.........கோதை பரிபாடக் காண்கு (கலித். 80) என வரும்.

மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் என்பது-களவின் வருகின்ற மனையோள் செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும் என்றவாறு.

'வாளை.........தொலையுந பலவே...' (நற்றிணை 390)

இது பரத்தையராகி வந்த காமக்கிழத்தியர் கூற்று.

காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற் கழறித் தழி இய மனைவியைக் காய்வின் றவன் வயிற் பொருத் தற்கண்ணும் என்பது-காதற் சோர்வினாலும் ஒப்புர வுடைமை

1. மறையின் வந்த வினையோள் என்றது, களவொழுக்கத்திற்குரிகளாய் ஒழுகிப் பின்பு தலைவனால் கனக்து கொள்ளப்பட்டு மனை யறத்திற்கு உரிமை

பூண் - தலைவியை.

2. கடிப்பாட்டாண்மை-ஒப்புரவுடைமை, கைம்மாறு வேண்டா கடப்பாடு

மாரிம ட் டென்னாற்றுங் கொல்லோவுலகு என் புழிக் கடப்பாடு ஒப்புரவு என்ற

-- .# பொருளில் ஆளப் பெற்றுள்ள மை பறியலாம்.