பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

摩蕊袋。 தொல்காப்பியம்-பொருளதிகாரக்

'கண்டேனின் மாயங்களவாதல்பொய்ந்நகா' (கலி, 90) என்னும் மருதக்கலியுட் காண்க.

இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்னும் - இல்லிடத் திருந்த தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக்கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும் :

கழனிமாத்து’ (குறுந்-8) 'நன்மாங்' (அகம் 156)

எனவரும் இவையும் இளையோர் கூற்று பிறவு அன்ன.

பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் - வெவ் வேறாகிய புதல்வரைத் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்

வேறுபல் புதல்வ' ரென்றார், முறைய ற்கொண்ட மனை வியர் பலரும் உள ராதலின், *

"ஞாலம் வறந்தீர' என்னும் மருதக்கலியுள் ,

'அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும்

மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து பேருமா ன கைமுகங் காட்டென்பாள் கண்ணிர் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன. ' :கலி. 82)

இது, முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது.

"மற்றும் வழிமுறைத் தாயுழைப் புக்க ற் கவளும் மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து - முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே

நினக்கியாம் யாரே மாகுது மென்று வனப்புறக் கொள்வன நாடி யணிந்தனன் 'கலி. 82)

இதனுள் நோய்தாங்கினளென இளமைப்பருவத்து மகிழ்ச்சி யும் முதிர்ந்த பருவத்து மறவியுந் தோன்றக் கூறாமையினா னும் வழிமுறைத்தா யென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள் கூற்று.

1. பல்வேறு புதல்வராவார் : தலைவனால் முறையே மணஞ்செய்து கொள்ளப்பெற்ற மனைவியர் பலரிடத்தும் தோன்றிய புதல்வர்கள்,