பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ i్క , -1 தொல்காப்பிய ம-பொருளதிகார ம

இது, துணிநிகழ்ந்துழித் தலைவனது தலைவளரிளமைக்கு ஒருதுணையாகி முதிர்ந்த காமக்கிழத்தி இங்ங்னங் கூட்டு மென்றார். -

'வயல்வெள் ளாம்பல்.........என்னாரே' (நற்றிணை 298)

இதனுள் நீ இளமைச்செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல் வற். பயந்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்றென வும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்தவேண்டும் நீ அவள் அவனோடு கட்டில்வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே, கொள்வது நின் இளமைக்கும் எழிற்கும் ஏலா தெனவும், அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலின் அவன் கடப்பாட்டாண்மை அதுவென்றுங் கூறினாள். -

இனி 'என் சொற் கொள்ளன் மாதோ' (நற்றிணை 290) என்பதற்கு என்வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க.

"ஈண்டுபெருந் தெய்வத்......நின்னயந்தோரே'

(நற்றிணை 315) இதனுள் மூத்துவினை போகிய அம்பிபோலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப்போலாது இவள் இப் பருவத்தே இனையளாகற்பாலளோ மலர்ந்த செவ்வியான் முறை வியாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப்போல எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க.

(இன் நகைப் புதல்வனைத் தழிஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற்கண்ணும்) இன் நகைப் புதல்வனைத் தழி இ இழை அணிந்து-கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல் வனை எடுத்துப் பொலங்கலத்தாற் புனைந்து கொண்டு : பின்னர் வந்த வாயிற்கண்ணும் - பல வாயில்களையும் மறுத்த பின்னர் வாயிலாகக் கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும்:

என் குறித் தனன்கொல் பாண்நின் கேளே வன்புறை வாயி லாகத் தந்த பகைவரு நக.உ.ம் புதல்வனே நகுவது கண்டு நகூஉ மோரே'