பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்.அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ல்க, கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோண் மாண்புகள் முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்தல் அகம்புகன் மரபின் வாயில்கட் குரிய.

இளம்பூரணம்: என்-எனின், அகம்புகல் மரபினவாக வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று.

(இ- ள். கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவு மாகிக் கிழவோள் மாட் டுளதாகிய தன்மைகளை முகம்புகு தன்மையானே தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின் வாயில் கட்குரிய என்றவாறு, -

செய்யுளியலுள் வாயி லுசாவே தம்முளுரிய (கு. க.க.க) என்பதனால், தலைமகற் குரைத்தலே யன்றித் தம்முள்தாம் கூறுதலும் உரியரென்று கொள்க.

மத வலியானை......... திருது தற் பசப்பே'(அகம். கூடுக) எனவும்,

'கண்டிசின்............புறங்கவ வினளே' (குறுந் கூடுக) எனவும்,

'யாயாகியளே............கரப்பா டும்மே” (குறுந். க) எனவும்,

'முளி தயிர்............முகனே' (குறுந் கசு.எ) எனவும்,

கானக்கோழி........ ...செம்மல் தேரே' (குறுந் , உசஉ) எனவும் ,

'பிரசங்கலந்த...சிறுமது கையளே' (நற்றிணை, கக0 எனவும்.)

'பாணர் முல்லை .....புதல்வனோடு பொலிந்தே (ஐங்குறு. சள அ) எனவும் வரும்.

1, அகம்புகல் மரபின் வாயில்களாவார் பாணர் கூத்தர் முதலியோர். இவர்கள் தலைமகனை எ க்காலத்தும் அகலாது கின்று தலைவியின் பிணக்கத்தைத்தீர்க்கும் வாயில்களாக மனைக்கண் பலகாலும் வக்து பழகும் இயல்பினராதலின் ‘அகம்புகல் மரபின் வாயில்’ என வழங்கப் பெற்றனர்.

இந்நூற்பாவில் மனைக்கிழத்திக்குரிய மாண்புகள் பலவும் தொகுத்துக் கூறப்பெற்றுள் ை க ைலசம்,