பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: * -- கற்பியல்-நூற்பா ); ፳፭ ፳ -ቓቕ

இவையெல்லாம் வாயில்கள் தம்முட் கூறின தலைவற். குக் கூறின வந்தவழிக் காண்க. (கல்)

  • , நச்சினார்க்கினியம்: இது விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட் புகு கற்குரிய வாயில்கள் கூற்று 'உணர்த்துகின்றது.

(இ-ள். கற்பும்-கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கமும்; காமமும் அன்பும் நற்பால் ஒழுக் கமும் எவ்வாற்றானுந் தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும்; மெல் இயற் பொறையும். வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் அவனைப்போலாது ஒரு தலையாக மெல்லென்ற நெஞ் சினராப்ப் பொறுக்கும் பொறையும்; நிறையும்-மறை புலப் படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும் : வல்லிதின் விருத்து புறந் தருதலும். வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்லவாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்வித்தலும்; சுற்றம் சிம்பலும்-கொண்டோன்' புரக்கும் நண்புடை மாந்தருஞ் சுற்றத் தாருங் குஞ்சர முதலிய காலேசங்களும் பல படை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்ட லும்; அன்னபிறவுங் கிழவோள் மாண்புகள். அவைபோல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை, முகம்புகல் முறைமை யிற் கிழவோ ற்கு உரைத்தல், அவன் முகம்புகுதும் முறையை"

1. அகங்கர்க் கட்புகுதற்குரிய வாயில்களா லார், லிருந்து முதலிய வாயில் கள் போன்று ஏதோ ஒருசில காலத்தில் தலைவனது மனைக்கண் புகுதலன்றித் தலைவனது சுற்றத்தாரைப் போன் து அவனது மனையகத்து அடிக்கடி சென்று :பழகும் இயல்பினராகிய வாயில்கள்.

2. 'நிறையெனப்படுவது மறைபிற ரறியாமை" (கலி-) என வரும் தொடர்ப்பொருளையுளங்கொண்டு இவ்வுரை வரையப்பெற்றுள் ன மை காண்க,

3. வல்லிதன்-தான் விருந்தோம்புதலிற் பயின்று வல்ல திறத்தால், இணை பான குடி மாறகாயனார் மனைவியார் தாம் பயின்றுவல்ல கைத்திறத்தால் அடி யார்க்கு அடிசில் சமைத்த திறம் இங்கு கினைக்கத் தகுவதாகும்.

4. கொண்டோன்-கணவன் ’

5, குஞ்சரம்-யானை, காலே சங்கள்-ஊர்திகள்.

6. முகம்புகுதும் முறைமையாவது, தலைவனது முகம்கோக்கி அவன் விரும் பி ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அவனது முன்னிலையிற் சென்று கூறும்

பழககமுடை:ை .