பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா )உ *T岛荔

பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந் தமை தோழிக்கு விறலி கூறியது. (திக)

ஆய்வுரை . இது, தலைவனது மனைக் கண் வத்து قت تقي بلا لس முறைமையினையுடைய பாணர் முதலிய வாயில்கள் உரையாடுதற் குரிய பொருள் வகையினைத் தொகுத்துரைக்கின்றது.

(இ-ள்) கணவனே தன்ஆருயிர்த்தலைவன் எனனும் உறுதி கயிற் கலங்காநிலைமையாகிய கற்பென்னுந் திண்மையும், தலைவன் பால் மாறாத வேட்கையும். நன்றின்பால் உய்க்கும் ஒழுககமும் அன்பென்னும் ஈரமுடைமையாகிய மென்மைத் தன்மையால் அறியாமையாற் பிறர் செய்த் குற்றங்கள்ைப் பொறுத்துக்கிொள்ளு தலும் மறை புறப்படாமையடக்கி நிறுத்தும் நிறையுடைமையும் தான் கற்றுவல்ல அட்டிற் றொழில் வன்மையால செல்வம் நல்குர வாகிய எந்நிலையிலும் விருந்தினரைப் பேணுதலும், சுற்றத்தாரைத் துயர்துடைத்துப் பாதுகாத்தலும் பிறவும் அத்தன்மையவாகிய தலைவியின் நற்குண நற்செயல்களை முகம் விரும்பிக் கேட்கும் முறையில் தலைவனுக்கு எடுத்துக் கூறும் கூற்றுக்கள் மனைக்கண் பலகாலும் வந்து பழகும் முறைமையினையுடைய பாணர் முதலிய வாயில்கட்கு உரியன. もアー』。.

யஉ கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக் குரிய வாகும் என்ப.

இளம் பூரணம்: என்-எனின். செவிலிக்குரிய கூற்று வருமா துணர்த்திற்று.

(இ ள்.) இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர் காலத்தினும் தன்குலத்தினுள்ளார் வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்ற

வாறு,

இறந்தகால முதலியவற்றாற் கூறுதலாவது முன்புள்ளார் இவ் வாறு செய்து நன்மை பெற்றார் இவ்வாறு செய்து தீமை பெற்றார் எனவும். இப்ப்ொழுது இன்னோர் இவ்வாறு செய்து பயன் பெறா நின்றாரெனவும், இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல்.