பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リfér&- தொல்காப்பியம் - பொருளதிகாரக்

அவை, அறனும் பொருளு இன்பமும் பற்றி நிகழும் : அவை யாவன, தலைமகன் மாட்டும் உலகத்தார்மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல்.

அவை மனையாளைப் பற்றி வருதலிற் காம தந்திரத்துட் பாரியாதிகாரமெனக் கூறப்பட்டன. அறம்பற்றி வருதல் திரு வள்ளுவப்பயன் முதலிய சான்றோர் செய்யுட்களுள் அறப்பகுதியிற். கூறப்பட்டன.

உ. ம் வருமாறு :

'தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலான் பெண்" (குறள் டுக.) எனவும், -

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யு மழை" - (குறள், 55) எனவும், - - * - -

'மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துனை." (குறள், 51) எனவும்,

'கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர் நாண் இயல்பினாள்-உட்கி இடனறிந் துாடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்.’’ (நாலடி 384 , இதனுள், 'கட்கிணியாள்" என்றதனால் கோலஞ்செய்தல் வேண்டு மெனக் கூறியவாறாம்; எனவும்

'அடிசிற் கினியாளை அன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை-அடிவருடிப் பின் துஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தால் என் துஞ்சுங் கண்கள் எனக்கு" எனவும் வரும். இவை நல்லவை'யுரைத்தல்.

'எறியென் றெதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை அட்டில் புகாதாள் அரும்பிணி-அட்டதனை. உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம் மூவர் கொண்டானைக் கொல்லும் படை” {த லடி. க. சுங் ச்

1. கழிவு இறந்தகாலம், கிகழ்வு . கிகழ்காலம். திர்வு-எதிர் காலம்,