பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா )உ 醉了芷薇一

எனவும்,

"தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான் பிறர் இல் சேறல் நிலைமையில்தீப் பெண்டிரில் சார்தல்-கலனணிந்து வேற்றுர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் - கோற்றொடியார் கோள் அழியும் ஆறு (அறநெறிக்.94) எனவும் வரும். இந்நிகரண அல்லவை கடிதலாம்,

பிறவும் அன்ன.

நச்சினா இது, செ விலிகூற்று உணர்த்துகின்றது •

( இ-ள். கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள மூன்று காலத்துத் தத்தங் குலத்திற்கு ஏற்கும்படியாக; நல்லவை உரைத்தலும் . முற்கூறிய கற்பு முதலிய தல்லவற்றைக் கற்பித்தலும்; அல்லவை கடிதலும் - காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிகலும்: செவிலிக்கு உரிய ஆகும் என்ப செவிலித் தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் (எ று ,

'கட்கிணியாள்............பெண்." (நாலடி. 384)

கட்கினியாள். இது காமம்; வகைபுனைவாள், இது கற்பு; உட்குடையாள், இஃது ஒழுக்கம்: ஊராண்மை, இது சுற்ற மோம்பல்: ஊடியுணர்தல், அல்லவை கடிதல் -

'நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்

மேலாறும் மேலுறை சோரினும்-மேலாய

வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்

இல்லாள் அமர்ந்ததே யில்’’ (நாலடி 383) என்னும் வெண்பா விருந்து புறந்தருதல் கூறியதுமாம்.

இனி ஆகு” மென்றதனானே செவிலி நற்றாய்க்கு உவத் துரைப்பனவுங் கொள்க.

கானங்தோழி (குறுந்தொகை 242). மறியிடைப்படுத்த (ஐங்குறு. 401), வாணுதலரிவை (ஐங்குறு.49.4) இவை உவந்து கூறியன.

'பிரசங்கலந்த' (நற்றிணிை. 110) இது மனையறங் கண்டு மருண்டு உவந்து கூறியது. அடிசிற்கினியாளை என்னும் பாட்டுச் செவிலிகூற்றன்றாயினுந்: