பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா கை. TTFG

என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர். அறம் பொரு வரின்பங்களாம் கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யு மழை’’ (குறள். 55) "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ (குறள். 58) * மனைத்தக்க் மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை." (குறள். 51) இவை நல்லவை யுணர்த்தல்.

எறியென் றெதிர் நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி-அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை” (நாலடி.363) "தலைமகனின் தீர்ந்தொழுகல் தான் பிறரில் சேறல்' நிலைமையில் தீப்பெண்டிர்ச் சார்த்ல்-கலனணிந்து வேற்றுார் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியு மாறு.’’ (அறநெறி. 94)

இவை அல்லவை கடிதல், இவை அறிவர் கூற்றாதலின் புறப்புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க." (கக.)

1. கற்பன கற்றுக்கடிவன்கடிக்தொழுகும் கற்பண்பினராகிய அறிவர், அறம் பொருள் இன்பங்களாகிய உறுதிப் பொருள் பற்றி முன்னோர் கூறிய செய்யும். களை எடுத்துக் கூறி கல்லவையுணர்த்தி அல்லவை கடிவர் என்பது கருத்து

2. புறப்புறப்பொருள்களாவன, அறம்பொருளின்பங்களின் கூறுபாடு தோன்ற கல்லவை புரைத்தலும் அல்லவை கடித லும் ஆகிய அகவாழ்வுக்கு இன்றியமையாத குறிப்புடன் முன்னுள்ள சான்றோர் பாடிய செய்யுட்கள். இவற்றை முன்னோர் கூறிய குறிப்பினும்: (தொல் . புறத் 22) என்ற தொடரில் தொல்காப்பியனார் குறிப்பிடுவர். இச்செய்யுட்கள் புறத்திண்ையொழுகலாற்றினைக்குறியாமல், ஒருவனும் ஒருத்தியும் மன்ையின்கண் இருந்து வையத்து வாழ்வாங்கு வாழும் கற்பிய லொழுக்கமாகிய அகத்திணைக்கு அரண்செய்யும் நோக்குடன் தலைவன் தலைவி இருவரையும் கல்லவையுரைத்து அல்லவை கடிந்து கன்னெறிப்படுத்தும் அறிவர் கூற்றாகவும் உலக வாழ்க்கையில் மனையறத்தார்க்கு மட்டுமின்றி மற்றையோர்க்கும் பயன்தரும் அறவுரைகளைத் தன்பாற் கொண்ட அற நூற் செய்யுட்களாகவும்: புறத்திற்கும்புறமாய் அமைந்தமையின் "இவை அறிவர் கற்றாதலிற் புறப்புறப் பொரு ளாயிற்றென வுணர்ந்து கொள்க’ என்றார் கச்சினார்க்கினிப்ர்.