பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் நூற்பா இரு శొజోర

இது, தலைவனைக் கழறியது. * மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

யெனைமாட்சித் தாயினு மில்.’’ (குறள், 52) இது, தலைவியைக் கழறியது. (கச} ஆய்வுரை : இ.. து அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. - -

(இ-ள்) தலைவனும் தலைவியும் அவ்வறிவர் ஏவல்வழி அடங்கி யொழுகுதற்குரியராதலின், அவ்விருவர்பாலும் தவறு கண்டுழி அவர்களை இடித்துக் கூறி வாழ்க்கை வரம்பாகிய எல்லையிலே அடங்கியொழுகச் செய்தலும் அவ்வறிவர்க்குரிய கடமையாகும். எ-து.

கிழவனும் கிழத்தியும் அவர் வரைநிற்றலின் இடித்து வரைநிறுத்தலும் அவரதாகும் என இயையும். அவர் என்னுஞ்சுட்டு மேலைச்சூத்திரத்தில் நின்ற அறிவரைச் சுட்டி நின்றது, இடித்தல் - தவறுகண்டவிடத்துக்கண்டித்தல், வரைநிறுத்தலாவது வாழ்க்கைவரம்பாகிய எல்லையில் நின்றொழுகச் செய்தல்.

இரு உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்

புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய.

இளம்பூரணம் : என்.எனின் தலைமகன் புலக்குமிடம் கூறுதல் துதவிற்று.

(இ.ஸ். புலவி அண்மைக் காலத்தது. ஊடல் அதனின் மிக்கது. பொருள் சூத்திரத்தான் விளங்கும்.

  • எவ்வி இழந்த வறுமையர் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மெளவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ தமக்கே’’ {குறுந். ககர் எனவரும். (கடு)

1, சிறிது நேரம் நிகழும் பிணக்கு புலவி எனவும், காலம் கீட்டித்து நிகழும். பிணக்கு கடல் எனவும் பெயர் பெறும்.