பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'க'அ தொல்காப்பியம்-பொருளதிக்ாரம்

நச்சினார்க்கினியம் : இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது.

(இ - ள்.) உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனனாயி னும்: செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலைவிசெய்த குறி யைத் தானே தப்பினும்; புலத்தலும் ஊடலுங் கிழவோ ற்கு உரிய உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ் வேறுபாடு மிக்கு நீடுநின்று தேற்றியக்கால் அது நீங்குதலுந் தலைவற்குரிய { ை று).

எனவே, கற்பிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய, களவிற்

கும் புலத்தலும் ஊடலுமுரிய வென்றார். புலவியும் ஊடலுங் கற் பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரியவென் கின்றார். அவை களவிற்குஞ் சிறுபான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திர்ச் சுருக்கம் நோக்கி. ' ' '. எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்." (குறுந் 19)

இது கற்பிற் புலந்தது.

"நீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி

யாதொன்று, மெங்கண் மறுத்தரவு இல்லாயின்” (கலி, 81) என்பது ஊடல். பிற இடத்தும் ஊடுதல் அறிந்துகொள்க.

'கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின்

புலந்தாயும் நீயாயிற் பொய்யானே வெல்குவை’ (கலி, 46)

என்பது குறிபிழைத்துழிப் புலந்தது.

"குணகடற் றிரையது பறை தபு நாரை’’ (ಅ.05. 128)

i. "~ສຸກ ມໍuລສ?” பாவது, தலைவன் தன்பாற் குற்றி மின்மை யுணர்த் தித் தெளிவிக்கத் தலைவி ஊடல் தணியும் எல்லை. இறத்தல்-கடத்தல்; வரம்புமீறுதல்.

2. செய்குறிபிழைத்தலாவது, களவொழுக்கத்தில் தலைவி செய்த குறியீ னைத் தலைவி தவறியொழுகுதல். புலத்தல்-உள்ளத்திற் பிணக்கம் தோன் றிச் சிறிது வேறுபடுதல், ஊடல்-அவ்வேறுபாடு மிகுந்து கெடிது கிலைத்தல்.