பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ல்சு ፳፻፷፰

என் பகனுள் நாரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட் ட ற்போல் நமக்கரியளாயினாளை நீ வேட்டா யென்பதனாற் குறி பிழைத் தழி ஊடினமை கூறிற்று, பிறவும் இவ்வாறு வருவன 2. ய் த்துணர்ந்து கொள்க. (கரு)

ஆய்வுரை : இது, தலைமகனுக்குரியதோர் இயல்புணர்த்து, கின்றது.

(இ - ள்) தலைவன் தன் தவரின்மையை உணர்த்தத் தலைவி உணர்ந்து ஊடல் நீங்கும் எல்லையினைக் கடந்த நிலை யினும், களவின்கண் தலைவி தான் செய்த குறியைத் தப்பிய நிலையினும் மனம் வேறுபட்டுப்பினங்குதலும் அப்பிணக்கம் நீடித்தலும் தலைவனுக்கு உரியன எ-று.

புலவி-சிறிது பொழுது நிற்கும் பிணக்கம். ஊடல் - நெடும்பொழுது நீடித்துளதாம் பிணக்கம்.

உணர்ப்புவயின்வாரா ஊடல் தோன்றின் புலத தல் தானே கிழவர் கும் வரையார் (இறையனார்.-ரு0)

என வரும் இறையனார் களவியல் நூற்பா இத்தொல்காப்பியச் சூததிரத்தினை அடியொற்றியமைந்ததாகும்.

ல் . . புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ்

சொலத்தகு கிளவி தோழிக் குரிய.

இளம்பூரணம்: இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று.

'அலந் தாரை யல்லனோய் செய்தற்றாற் காமம்

புலந்தாரைப் புல்லா விடல்' (குறள். 1308) இது கற்பு.

'கலந்தநோய் கைமிகக் கண்படா வெம்வயிற்

புலந் தாயு நீயாகிப் பொய்யானே வெல்குவை,

1. தலைவன் பால் புலத்த லும் ஊடலும் தோன்றியநிலைமைக்கண் தலை வனுக்கும் தலைவிக்கும் கூறவேண்டிய அறிவுரைகளைக் கூறி அப்பிணக்கினைத் தணிவித்தல் தோழியின் கடமையாகும்,