பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொல்காப்பியம் - பொருளதிகாரம்

களவொழுககத்தில் உரிமைபூண்டொழுகிய தலைவனும் தலைவி பும் உலகத்தார் அறிய மனையறம் நிகழ்த்துதற்கு உரிமை செய்தளிக்கும் செயல்முறைகளே பண்டைத்தமிழர் கொண்டொழு கிய திருமணச் சடங்காகும். இதனைக் கரணம் என்ற சொல்லால்

வழங்குவர் தொல்காப்பியனார்.

கணவனிற் சிறந்த தெய்வம் இல்லையெனவும் அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும் தலைமகளுக்குப் பெற்றோர் கற்பித்தலானும், அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் விருந்தினர் முதலியோர்பால் இன்னவாறு நடந்து கொள்ளுதல் வேண்டுமெனத் தலைவன் தலைவிக்குக் கற்பித்தலானும், நின்மனைவியை இன்னவாறு பாதுகாப்பாயாக' எனத் தலைவனுக் கும், நின்கணவனுக்கு இவ்வாறு பணிசெய்தொழுகுவாயாக' எனத் தலைவிக்கும் சான்றோர் கற்பித்தலானும், இனித் தலைவனும் களவின் கண் ஒரையும் நாளுத் திதென்ற எண்ணத்தினைத் துறந் தொழுகினாற்போல ஒழுகாது ஒத்தினும் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கொண்டு இல்லறம் நிகழ்த்துதலானும் இத்திருமணச் சடங்காகிய கரணமும் கற்பெனப்படுவதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர்.

தலைவன் தலைவி இருவரும் ஒருவரையொருவர் இன்றி. யமையாதவராய் மணந்து வாழுங்கால் தலைமகளது மனத்தின் கண் அமைந்த கலங்காநிலைமையாகிய திண்மையே கற்பெனப் படும் என்பது தமிழ் முன்னோர் துணியாகும்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் 'திண்மையுண் டாகப் பெறின்' (திருக்குறள்-54)

என்றார் திருவள்ளுவர். இத்தகைய மனத்திண்மையினையும் தலைவனது நிறையினையும் உலகத்தார் அறியப் புலப்படுத்துவதே திருமணச் சடங்காகிய கரணமாகும். காதலர் இருவரும் ஈருடற்கு ஒருயிரெனப் பிரிவின்றியியைந்த நட்புடையார் என்பதனை வலி யுறுத்துவது இத்தகைய திருமணச் சடங்காகிய கரணமேயாதலின், இந்நியதி பிழை படுமேல் அவ்விருவரது வாழ்க்கையிலும் சாதலை யொத்த பெருந்துன்பம் திேரும் என்பது திண்ணம். கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும்” என நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டிய பழமொழி கரணத்தின் இன்றியமையாமையை வலி புறுததல் காணக,