பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிற்யல்-நூற்பா )ள ாடுக

'கனைபெயல் நடுநாள் யான் கண்மாறக் குறிபெறாஅன் புனையிழாய் என்பழி நினக்குரைக்குந் தானென்ட துளிநசைஇ வேட்கையான் மிசைபாடும் புள்ளில் தன் அளிநசை ஆர்வுற்ற அன்பினேன் யானாக' (கலி. 46)

எனத் தோழி சொல்லெடுப்பதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலும் ஈண்டு உரியவென்பதனாற் கொள்க.

யானுாடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானுட யானுணர்த்தத் தானுணரான்-தேனுாறுங் கொய்தார் வழுதிக் குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு.’’ (முத்தொள்ளாயிரம், 104)

இதனுள் யானுணர்த்தத் தானுணரானெனப் பாடாண் திணைக் கைக்கிளையுள் தலைவி கூறியது காண்க. {கசு)

ஆய்வுரை : இது தோழிக்குரியதோ ரியல்பு கூறுகின்றது.

(இ - ள்) தலைவன் தலைவி என்னும் இருவரிடையே புலவி யும் ஊடலும் ஆகிய பிணக்கங்கள் தோன்றிய நிலையிலும் அவற் றைத் தனிக்கும் வண்ணம் சொல்லுதற்குரிய கூற்றுக்கள் தோழிக்கு உரியனவாம் என்றவாறு.

தலைவன் புலத்தலும் அது நீட்டித்த நிலையில் ஊடலும் கொண்ட நிலையில், தலைவி உரையாடுதல் இல்லையென்பதும், தலைவியின் குறிப்பறிந்து தோழியே உரையாடுதற்கு உரியள் என்பதும் இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்க,

மாகும்.

இள. பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிழவி

மடத்தகு கிழமை உடைமை யானும் அன்பிலை கொடியை என்றலும் உரியள்.

இளம்பூரணம் : இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று.