பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாடுஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும் '

'மகிழ்செய் தேமொழித் தொய்யில் சூழ் இளமுலை முகிழ்செய முள் கிய தொடர்பவள் உண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க கொடியை காண் நீ;

இலங்கேர் எல்வளை ஏர்தழை தைஇ நலஞ்செய நல்கிய தொடர்பவள் சா அய்ப் புலந்தழப் புல்லாது விடுவாய் இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண் நீ." (கலித். கஉரு}

سیخ

என வரும். (கா)

நச்சினார்க்கினிய இது, சொல்லத் தகுங் கிளவியேயன் றிச் சொல்லத்தசாக் கிளவியுந் தோழி கூறுமென எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது.

(இ - ள். பரத்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்றுள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல் விரும்பியும்; கிழத்தி மடத்தகு கிழமை உடைமையானும்தலைவி அவன் பரத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக்கொண்டு சீற்றங்கொள்ளாது. ஒழுகும் மட னென்னு ங் குணத்திற்கு ஏற்றன அறிந்தொழுகும் உரிமையுடையளாகிய எண்மையானும்: அன்பிலை கொடியை என்றலும் உரிய ள்தலைவனை அன்பிலை யென்றலுங் கொடியை யென்றலுமுளியள் தோழி (எ - று.)

கொடுமை கடையாயினார் குணம். களவினுள் தன்வயி னுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க.

"கண்டவ ரில்லென உலகத்துள் உணராதார்’ (கலி உரு) என்னும் நெய்தற்கலி கைகோள் இரண்டிற்குங் கொள்க. (கன)

.............

1. தலைவனது பரத்தமைக்குற்றத்தை மறுத்து நீக்குதல் வேண்டியும் தலைவி அதனை நீக்குமாறு அறியாத மடம்பட்ட அறிவின் கிழமையுடையளாதல் கருதியும், "நீ தலைமகள்பால் அன்புடைய பல்லை; அவட்குக்கொடுமையே புரிகின்றாய்' எனத் தோழி தலைவன். முன்னின்று இடித்துரைத்தற்கும் உரியன்

என்பதாம்.