பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா கி.அ ாருக.

ஆய்வுாை இதுவும் அது. - (இ-ள்.) பரத்தையரை விரும்பியொழுகும் தலைவனது புறத்தொழுக்கத்தை நீக்குதல் கருதியும் தலைவி மடனென்னும் குணத்தால் அடங்கியொழுகும் எளிமையுடையளாதல் கருதியும் தலைவனை அன்பிலைகொடியை' எனத் தோழி இடித்துரைத் தற் கும் உரிய ள் எ-று.

'பரத்தை என் ரது, பரத்தையரைச் சேர்ந்தொழு கலாகிய புறத் தொழுக்கத்தைச் சுட்டி நின்றது 'பரத் தமை எனப் பாடங் கொண்டார் நச்சினார்க் கினியர். மறுத்தல் - தீதென விலக்கு தல் மடத்தகு கிழமையாவது, தலைவனது குற்றத்தினையறிந்தும் அறியாள் போன்று ஒழுகுதலாகிய மடன் என்னுங் குனத் தினைத் தனக்குரிய இயல்பாகக் கொண்டிருத்தல்,

'அன்பிலையை கொடியை' என்றல் தோழி யாற் சொல் லத் தகாத கிளவியாயினும், தலைவனது பரத்த மையொழுக்கத்தை இடித்துரைத்துத் தவிர்த்தல் காரணமாகவும், அவனது குற்றத்தை நேரில் அறிந்தும் வெகுண்டு விலக்க முடியாத மடமைக் குணத் தினள் தலைவியாதலானும் இங்ங்னம் கடுளுசொற கூறித் தலை வனைத் திருத்துவதற்கு உளியாள் தோழி என்றார் ஆசிரியர், ங்அ. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி

அகமலி யூடல் அகற்சிக் கண்ணும் வேற்றுமைக் "கிளவி தோற்றவும் பெறுமே.

இளம்பூரணம் : இது தலைவிக் குரியதொரு மரபுணர்த்திற்று. (இ. ள்.) தலைவன் குறிப்பறிதல்வேண்டியுந் தலைவி தனது அகமலிந்த ஊடல் நீங்கும் இடத்தினும் வேற்றுமைக்கிளவி : தோற்றவும் பெறும் என்றவாறு.

யாரிவன் என் கூந்தல் கொள் வான்’’ (கலித். அசு) எனவும்,

'யாரையோ எம்மில் புகுதருவாய் ’’ )563 ہنے جی صلى الله عليه وسلم( எனவும் கூறியவாறு காண்க. - (க.அ)

!

1. வேற்றுமைக் கிளவி என்பது, ஒத்த அன்பினால் உள்ளம் ஒன்றி ஒருமை புணர்வினராய் வாழும் காதலர் இருவரிடையே ஒருவர் ஒருவரின் வேறுபட்டுள் ளார் கமக்கு உறவினரல்லர் என்னும் வேற்றுமையுணர் வினைத் தோற்றுவிக்கும்

கிலையில் அமைந்த சொல்லாகும்.