பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா பிக் . ஈருரு

கெ. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி

காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான.

இளம்பூரணம் : இது, தலைமகற் குரியதொரு மரபுணர்த் திற்று. .

இது, சூத்திரத்திாற் பொருள் விளங்கும். '

“ஒரு உ, கொடியியல் நல்லார் குரல் நாற்றத்துற்ற’’ என்னும் மருதக்கலியுள்,

"பெரியார்க் கடியரோ ஆற்றாதவர்’ ன்னத் தலைவி கூறியவழி,

"கடியர் தமக் கியார்சொலத் தக்கார் மற்று’ (கலித். அ.அ)

எனவரும். (கசு)

நச்சினார்க்கினியம் : இது, தலைவி வேற்றுமைக்கிளவி தோற்றிய பின்னர்த் தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறு கின்றது.

(இ - ள்) காமக் கடப்பினுட் பணிந்த கிளவி . அங்ங்னந் தலைவிகண்ணுந் தோழி கண்ணும் வேறுபாடு கண்டுழித் தனக் குக் காமங் கையிகந்துழித் தாழ்ந்துகூறுங் கூற்று ; காணுங் காலை கிழவோற்கு உரித்தே - ஆராயுங் காலத்துத் தலைவற்கு உரித்து; வழிபடு கிழமை அவட்கு இயலான - அவனை எஞ் ஞான்றும் வழிபட்டொழுகுதல் தலைவிக்கு இல்லறத்தோடு பட்ட இயல்பாகலான் (எ . று. )

'ஆயிழாய். நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்க. ணெவனோ தவறு” (கலி, 88)

1. காமம் எல்லைகடந்துமிக்க நிலையிற் பணிந்து கூறும் சொல் ஆராயுங் காலத்துத் தலைவனுக்கு உரியதாகும்; கணவனை வழிபட்டொழுகும் உரிமை னக்காலத்தும் தலைமகளுக்கு இயல்பாய் அமைந்திருத்தலால்.

3. காமக் கடப்பு . காமம் எல்லை கடத்தல்.

பணிந்த கிளவி தாழ்ந்து கூறும் கூற்று.