பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாருக தொல்காபபியம்-பொருளதிகாரம்

"கடியர் தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று' (கலி. 88) நின்னாணை கடக்கிற்பா ரியார்' (கலி, 81)

என்றாற் போல்வன கொள்க.

காணுங்காலை என்றதனால் தலைவன் தலைவியெதிர் புலப் பது தன்றவறு சிறிதாகிய இடத்தெனவும், இங்ங்ணம் பணிவது தன் தவறு பெரிதாகிய இடத்தெனவுங் கொள்க. ' (க.க)

ஆய்வுரை: இது, தலைவர்க்குரியதோர் இயல்புணர்த்து கின்றது.

(இ-ள்.) காமவுணர்வுமிக்குத்தோன்றிய நிலையிற் பணிந்து கூறுங் கூற்று ஆராயுங்கால் கணவனுக்குரியதாகும்; கணவனை எக்காலத்தும் வழிபட்டொழுகும் உரிமை மனைவிக்குரிய சிறப் பியல்பு ஆக லான் எ- று,

காமக் கடப்பு என்றது, காமவுணர்வு தனக்குரிய எல்லை யைக் கடந்து மிக்க நிலையினை, பணிந்த கிள்வி-பணிவினைப் புலப்படுத்தும் முறையில் வணங்கிக் கூறும் சொல். காணுதல்மனத்தாற் கருதியுணர்தல். வழிபடு கிழமை அவட்கு இய' வான, பணித்த கிளவி கிழவோற்கு உரித்து' என இயையும்.

ള്ളി), அருண்முந் 59,55 அன்புபொதி கிளவி

பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே

இளம்பூரணம்: இது தலைமகட்குரியதோர் இயல்புணாத்திற்று.

(இ-ன் பொருள்பட மொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல்

'உதாரணம் வந்த வழிக் காண்க. (உ0)

1. கணவன் தன் தவறு சிறிதாகிய கிலையில் மனைவியெதிர் புலத்தலை மேற்கொள்வதும், தன் தவறு பெரிதாகிய கிலையில் மனைவியைப் பணிதலும் உலகியல் வாழ்வினை ஆராயுங்காலத்துப் புலனாம் என்பார் 'காணுங்காலை' - ன்றார். காணுதல் . ஆராய்தல்.

2. அருட்பண்பினைத் தோற்றுவிக்கும் அன்புபொதிந்த இன் சொற்களைப் பொருள் கிரம்பியதாகத் தோன்றச் சொல்லுதல் தலைமகளுக்குரிய இயல்பாகும். -