பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இர்பியல் நூற்பா. . . - இன்

நச்சினார்க்கினியம் இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென் கின்றது.

(இ-ள். அருள் முந்துறுத்த அன்பு ப்ெர்தி கிளவி பறா அவலங் கண்டு அவலிக்கும் அருள் முன் தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழு அன்பினைக் கரந்து சொல்லுங், கிளவி, பொருள்பட மொழிதல்

பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து (எ . று)

வேறு பொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கை கடக்க அவன் ஏவலைச் செய்ததென்றாற் போலக் கூறுதலுமாம்,

இது "தன்வயிற் கரத்தலும் அவன் வயின் வேட்டலும்’ (தொல். பொ 11) எனப் பொருளியலுள் வழுவமைத்திற்கு இலக்கணம்.

"இணையிரண்டு” என்னும் மருதக்கலியுள்,

'மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்

வீசேர்ந்து வண்டார்க்குங் கவின் பெறல் வேண்டேன்மன்

நோய் சேர்ந்த திறம்பண்ணி நின் பாணன் எம்மனை

நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின்’ {க்லி.77;

எனக் கூறிய தலைவி,

1. அருள் என்றது, பிறர் துயரங்கண்டு வருக்தி அவர் தம் துன்பங்களைத்

துடைத்தற்கு முந்துங்கருணையினை. -

முந்துறுத்தல் '- முன்னே தோற்று வித்தல்,

அருள் முங் துறுத்த என்பதனை அன்புக்கு அடையாக்குக உயிர்ப்பண்பர்கிய அன்பின் இலக்கணம் கூறவந்த தொல்காப்பியனார், அருளுனர் வைத்தோற்றுவித்தற்கு ஏதுவாகிய அன்பு என்பார், 'அருள்முந்துறுத்த ஒன்றார். அவர் ◌ພrg.ສ.ສ அடியொற்றி அருளாகிய பண்பினை விளக்க ಶಿ திருவள்ளுவர், அருள்ென்னும் அன்பீன் குழவி (திருக்குறள் - 757) என்றார். அன்புபொதிகிளவி . அன்பினை அகத்தடக்கிக் கொண்டு கூறும் சொல். பொருள் பட மொழிதலாவது,.வேறோர் பொருள்பயப்பக் கூறுதல். அஃதாவது தலைவன் கூறியது போன்று பணிந்து கூறுகின்றவள், தன்பணிவின்ை வெளிப்படப் புலப்படுத் தாமல் தனது நெஞ்சம் தனது ஆணையையுங்கடந்து தலைவனது ஏவலைச் செய்தது என்றாற்போன்று வேறோர் பொருள்பட மறைத்துக்கூறுதல்.