பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதி.அ தொல்காப்பியம்-பொருளதிகாசன்

  • கஉைஇய நின்மார்பு தோயலம் என்னும் இடையு நிறையும் எளிதோநிற் காணின் கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ டுடன் வாழ் பகையுடை யார்க்கு" (கவி. 77)

என்புழி நிற்காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்செனவே அவன் ஆற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்ததென வேறோர் போருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க. "கூர்முண் முள்ளி’ (அகம். 26) என்பதனுட் "சிறுபுறம் கவையினன்' என அவன் வருந்தியது ஏதுவாகத் தான் மண் போன் ஞெகிழ்ந்தேனென அருண் முந்துறுத்தவாறும், இவை பாராட்டிய பருவமும் உளவென அன்பு:பொதிந்து கூறியவாறும், ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் நெஞ்சநைபோகிய அறிவினேற்கெனத் தன் அறிவினை வேறாக்கி அதன்மேலிட்டுக் கூறியவாறுங் காண்க,

ஆய்வுரை: இது, தலைவிக்கு உரியதோர் இயல்பு உணர்த்து கின்றது.

(இ-ள்) அருட்பண்பினைத் தோற்றுவிக்கும் அன்பினை புள் ளடக்கிய சொற்களைப் பணிதற்பொருள் தோன்றச் சொல்லுதல் தலைவிக்கும் உரியது எ-று,

அன்பின் இலக்கணம் கூறும் முறையில் அமைந்தது. அருள்முந்துறுத்த அன்பு' என்னும் தொல்காப்பியத் தொடராகும். இதனை அடியொற்றி அருளின் இலக்கணங்கூறுவதாக அமைந்தது. அருளென்னும் அன்பீன் குழவி (757) எனவரும் திருக்குறள் தொடராகும்.

பொருள் என்றது, மேலைச் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட பணிந்த மொழிப்பொருளை, படுதல்-தோன்றுதல். கிழவோட்கும் எனபுழி உம்மை கிழவோற்கே யன்றிக் கிழவோட்கும் என் இறந்ததுதழி இய எச்சவும் மையாகும்.

వీళీడి, களவுங் கற்பும் அலர்வரை வின்றே. இளம்பூரணம் : என் . எனின், அலர் ஆமாறு உணர்த்திற்று.