பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகச தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உச. மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை

தம்முள வாதல் வாயில்கட் கில்லை.

இனம் பூரணம் : என் எனின், வாயில்கட் குரியதொரு மர புணர்த்திற்று.

(இ - ள்.) மனைவிமாட்டுக் கிழவோன் கொடுமையைத் தாங்கார் கூறல் வாயில்கட்கில்லை என்றவாறு. (உகர் நச்சினார்க்கினியம் : இது, வாயில்கட்கு உரிய இலக்கணங் கூறுகின்றது.

(இ. ள்.) மனைவி தாட்டலை தலைவி எத்திறத் தானும் புலந்துழி அவளிடத்து; கிழவோன் கொடுமை தலைவன் கொடுந்தொழில்களை; தம் உள ஆதல் தம் உரைக்கண் உள வாக்கி உரைத்தல்; வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில் களுக்கில்லை (எ . மு).

தாட்டலையென மாறு.க. அது பாதத்திடத்தென்னுந் தகுதிச்சொல். அது வாயில்கள் கூற்றாய் வந்தது. ' உதாரணம் வந்துழிக் காண்க. (உச)

ஆய்வுரை இது. வாயில் கட்கு உரியதோர் திறம் கூறுகின்றது.

(இ-ள்) ம்னைவியின் முன்னிலையில் கணவனது புரத் தொழுக்கமாகிய கொடுமையினைத் தம் உரையாடலிற் கொண்டு கூறுதல் வாயில்கட்கு இல்லை எ-று.

3. மனைவிதாள்தலை' எனற்பாலது மனைவி தலைத்தாள்' என முன் 3.శ వాత தொக்கு கின்றது. தாள்தலை . பாதத்தின் கண். தம்மினும் உயர்ந்தோர் பால் ஒன்றினைத் தெரிவித்துக் கொள்ளும் நிலையில் தங்கள் அடியின் கண் பாதத்தில்) இதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனக்கூலும் உரையாடல் மரபினை அடியொற்றி வாயில்கள் தலைவியின்பால் உரையாடுதற்குரியன் என்ப தனைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது, "மனை விதலைத்தாள்’ என வரும் தொடராகும். “Qurశrణాr திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்' எனவரும் அப்பாடிகள் அருளிச் செயல் தொன்றுதொட்டுவரும் இச்சொல் மரபினை இனிது புலப்படுத்தல் அறியத்தகுவதாகும்.

2. மனைவியின் பாதத்திடத்து' என்னும் பொருளுடைய மனை விதலைத் தர்ஸ் என்னும் தகுதிச் சொல், ஈண்டு நூலாசிரியர்' கூற்றாகாது வாயில்கள் கூற்றாய் வந்தது என்பதாம்.