பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் நூற்பா உடு ாசடு

வாயில்களாவார், கணவனும் மனைவியும் ஆகிய காதலர் இருவரது கருத்தினையும் உளத்திற் கொண்டு அவ்விருவரும் அன்பினால் ஒன்றி நிகழ்த்தும் மனை யறத்திற்குத் துணை நின் துதவும் பார்ப்பான். பாணன். பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர் முதலியோர். கணவன் மனைவி என்னும் இருவரும் ஒன் அறிய கேன்மையினராய் மனை வாழ்க்கையினை மாண்புற நிகழ்த் துதற்குத் துணை நின்று உதவும் கடமையினராகிய வாயில்களே கணவனது கொடுமையினை மனைவிக்குப் புலனாக அவளது முன்னிலையிற் கூறுவராயின் அவர் தம் கூற்றினால் மனைவியின் மனம் வருந்த மனைவாழ்க்கை மாட்சிமை பெற இனிது நிகழாது. ஆதலால் மனைவியின் முன்னர்க் கணவனது கொடுமையினை வாயில்கள் தம் முட் கொண்டு கூறுதல் கூடாது என அறிவுறுத் தும் முறையில் அமைந்தது இந் நூற்பாவாகும்.

உரு மனைவி முன்னர்க் கையறு கிளவி'

மனைவிக் குறுதி உள்வழி உண்டே

இளம் பூரணம் : என்.எ னின், இதுவுமது.

(இ-ள்) மனைவி முன்னர்ச் செயலற்றுக் கூறுஞ் சொல் மனைவிக்கு உறுதியுள்வழி வாயில்கட்கு உண்டு என்றவாறு.

  • இனியவர், வரினும் நோய்மருந் தல்லாய் வாரா

தவணர் ஆகுக காதலர் இவண் நம் காமம் படர்பட வருத்திய : நோய்மலி வருத்தங் காணன்மா ரவரே. {ു്)

என வரும்.

நச்சினார்க்கினியம் : இஃது எய்தியது. இகந்துபடாமற் காத் தது; இன்னுழி யாயிற் பெறுமென்றலின்.

(இ-ள்) மனைவி முன்னர்க் கையறு கிளவி தலைவி முன் னர்த் தலைவன் காமக்கடப்பினாற் பணியுந் துணையன்றி நம்மைக் கையிகந்தானெனக் கையற்றுக் கூறுங்கூற்று: மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே - புலந்துவருந் தலைவிக்கு மருந்தாய் அவன்

1. கையறுகிளவி செயலற்றதன்மையைப் புலப்படுத்தும் இரங்கல்மொழி,