பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா உஅ * ញុំ

தல்-தலைவன் சேட்புலத்துப் பிரிந்துறைதலைத் தலைவிக்காக வரைந்து மீளும் நிலைமை கூறுதல்; கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை" உரிய - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய (எ-று}.

யாப்பமைதலாவது, தோழியைப் போலச் செலவழுங்கு வித்தல் முதலியன பெறாராகலின், யாழெழி இக் கடவுள் வாழ்த்தி அவளது ஆற்றாமை தோன்றும் வகையான் எண்வகைக் குறிப் பும்பட நன்னயப்படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன.

அரக்கத் தன்ன செந்நிலப் ...... முனைநல் லுசரன் புனை நெடுந்தேரே...' (அகம் 14) இதனுள், தலைவி யிரக்கந்தோன்றக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர் மீள நினையாநின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க.

கூத்தர் கூற்று வந்துழிக் காண்க. ്ല-ക്ട്) ஆய்வுரை : இது நாடகத்தமிழ் வளர்க்கும் கூத்தர்க்கும் இசைத்தமிழ் வளர்க்கும் பாணர்க்கும் பொதுவாக உரிய கிளவி களைத் தொகுத்துரைக்கின்றது.

(இ-ன்) (தலைவியைத் தலைவன் பிரிந்த நிலையில் தலைமகளது ஆற்றாமையினை) இடம்பெயர்ந்து சென்று (தலை வனுக்குக்) கூறுதலும், தலைவன் பிரிந்துறையும் சேய்நிலத்தின் திலைமையினை மீண்டு வந்து (தலைவிக்குக்) கூறுதலும் கூத் தர்க்கும் பாணர்க்கும் ஒப்பப் பொருந்தியனவாக உரியவாகும்

எ-று.

நிலம் பெயர்ந்துரைத்தலாவது, தாம் வாழும் ஊரினை விட்டு நீங்கி நெடுந் தூரத்திற் சென்று தங்கிய தலைவனுக்குத் தலை வியது ஆற்றா நிலைமையைக் கூறுதல். அவனிலையுரைத்த லாவது, தலைவன் தங்கியிருக்கும் அவ்விடத்து நிலைமையினை மீண்டு வந்து தலைவிக்குக் கூறுதல் . அவனிலையுரைத்தல்'

1. கிலம்பெயர்ந்துரைத்தல், அவள் கிலையுரைத்தல் எனப்பாடங்கொண்டார் இளம்பூரணர். கிலம் பெயர்ந்துறைதல் வரை கிலையுரைத்தல் எனப்பாடங்கொண்டு சேட்புலத்துப்பிரிங் துறைந்த தலைவன், தலைவியின் துயர் துடைத்தல் வேண்டி அன்விடத்தினின்றும் நீங்கி மீளும் நிலைமையினைக் கூறுதல் எனப்பொருள்கொள் வர் கச்சினார்க்கினியர்.

2. யாத்தவை , இயைபுடையனவாகப் பொருந்தியவை.