பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎莺强。 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

என்பது 'அவன்நிலை யுரைத்தல்' எனப் பிரித்துப் பொருள் வரையப்பட்டது. "அவனி, லயுரைத்தல்’ என்பதனை அவள் திலையுரைத்தல் எனப் பிரித்துப் பொருள் கொள்வர் இளம்பூரணர் , இப்பொருள் நிலம் பெயர்ந்துரைத்தல்' என்பதன்கண் அடங்கு மாதலானும் ரில்ம் பெயர்ந்து சென்ற கூத்தரும் பாணரும் த லை வன் தங்கிய இடத்தின் நிலைமையைத் தெரிந்து தலை விக்கு மீண்டுவந்துரைத்தல் வேண்டுமாதலானும் அவன் நிலையுரைத் தல் எனப்பிரித்துப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக் கு அரபுடையதாகும்.

உக ஆற்றது பண்பும் கருமத்து வினையும்,

ஏவன் முடிபும் வினாவுஞ் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியுந் தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க் குரிய கிளவி யென்ப.

இளம்பூரணம்: இஃது இளையோர்க்குரிய கிளவியாமா துணர்த்திற்று.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

"விருந்தும் பெறுகுநள் .....ஆய்ந்தே’’ (அகம். கஉச)

எனவரும், பிறவு மன்ன. (உக)

விளே அம், S ன் றிருத்தல் வேண்டும்.

1. ஆற்றது பண்பு என்றது, வெம்மை, தண்மை, கடத்தற்கு அருமை எளிமை முதலிய வழியின் பண்புகளை,

- கருமத்து விளைவு என்றது, செய்யத்தொடங்கிய வினையால் உள அாகும் பயன்.

ஏவல் முடிவு . ஏவிய பணியினை முடித்தல். வினா. தாம் செயதற்குரிய பணியாது என வினவித்தெரிந்து கொள்

சப்பு - சொல்லுதற்குரியவற்றை உரிய விடத்தில் உரியகாலத்தில் உரியவர்களுக்

குக் கூறுதல்.

ஆற்றிடைக்கண்ட பொருள் - தாம் வரும் வழியிற்கண்ட பொருள்களின் நிகழ்ச்சி.

இறைச்சி விலங்கு பறவை முதலிய அங்கிலத்துக் கருப்பொருள்கள். தோற்றஞ் சான்ற அன்ன வை - வழிச்செல்வார்க்குப் புலப்பட்டுத் இதன் i னும் சிறப்பின வாகவுள்ள அவை போல்வனவாகிய பிறபொருள்கள்.