பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிற்யல்-நூற்பா உக 矿可瓦

நச்சினார்க்கினியம்: இஃது உழைக்குறுந்தொழிற்குங் காப்பிற்கும் (தொல், பொ, 171) உரியாராகிய இளையே ர்க் குரிய இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினுந் தானே யாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாலராகிய இளையோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்தென்று ஆற் றது நிலைமை கூறுதலும்; கருமத்து விளைவும் ஒன்றாகச் சென்றுவந்து செய்பொருண் முடிக்குமாறு அறிந்து கூறுத லும்: ஏவல் முடிவும் - இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்துவந்தமை கூறலும்; வினாவும்தலைவன் ஏவலைத் தாங் கேட்டலும்; செப்பும்-தலைவன் வினாவாத வழியும் தலைவிக்காகவாயினுஞ் செப்பத் தகுவன தலைவற்கு அறுவுகூறுதலும்; ஆற்றிடைக் கண்ட பொருளும்செல்கரத்துக் கண்ட நிமித் தம் முதலிய பொருள்களைத் தலை வர்க்குந் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறலும்: இறைச்சியும். ஆண்டுமாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றை அவ் விருவர்க்குமாயினுந் தலைவற்கேயாயினுங் காட்டியும் ஊறு செய்யுங் கோண்மாக்களை அகற்றியுங் கூறுவனவும்: தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் அங்ங்னம் அவற்குத் தோற்றுவித் தற்கமைந்த அவை போல்வன பிற கூற்றுக்களும்; இளையோர்க்கு உரிய கிளவி என்ப இளையோர்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர் (எ . லு).

தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிற பொரு ளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர் கண் அடங்கும். ஏவன் முடிவிற்கும் இஃதொக்கும். சான்ற வென்றதனான் ஆற்றது பண்பு கூறுங்கால் இதுபொழுது இவ்வழிச்சேறல் அமையா தென விலக்கலுங் கருமங்கூறுங்காற் சந்துசெய்தல் அமையு ஒமனக் கூறுதலும் போல்வன அமையவாம், அவர் அவை கூறப் பெறாராகலின். பிறவாவன, தலைவன் வருவனெனத் தலைவி மாட்டுத் தூதாய்வருதலும், அறிந்து சென்ற தலைவற்குத் தலைவி நிலை கூறுதலும், மீளுங்கால் விருந்து பெறுகுவள் கொல்லெனத்

1. அகப்பொருளொழுகலாற்றில் ஒற்றர்க்கு இட்மின்மையால், தலைவியது செய்தி அறிந்துவங்து கூறுவனவும், பிறபொருளுணாந்து வந்து கூறுவனவும் இளையோர்க்குரியகிளவிகளாகவே கொள்ளத்தக்கனவாதலின், இவற்தை ஒற்றர்க் தசியவாகக் கூறுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.