பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ளக் தொல்காப்பிய்ம் - பொருளதிகாரம்

இளம்பூரணம் :

இது தலைமகற் குரியதொரு மரபுணர்த்திற்று :

உ - ம் : இம்மை உலகத் திசையொடும்......

அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே'(அகம்சுசு) என வ்ரும், (ங்க)

நச்சினார்க்கினியம் இது, மேல் அதிகாரப்பட்ட வாயில் பரத்தையிற்பிரிவொடும் பட்டதாகலின் அதுகூறி இனித் தலைவன் பரத்தைமை நீங்குமிடங் கூறுகின்றது.

(இ - ள்.) பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவைமூவதை வருணத்தாரும் முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை மனைவியர்க்குப் பின்னர் முறையாற் செய்துகொள்ளப் பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனைவியரை தொன் tta), மனைவி , எதிர்ப்பாடாயினும் - பழையதாகிய முறைமை வினையுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக்கோடற் சிறப்பினும்: இன் இழைப் புதல்வை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண் களையணிந்து தொன் முறை மனைவி புதல்வனைக் கோல்ங்கட்டிய செல்வாள்போலப் பின் முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும் கிழவோன் இறந்தது' தினை இ தலைவன் இங்ங்ணம் செய்கை யுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து, ஆங்கட் கலங்கலும் உரியன் என் மனார் புலவர் . அப்பரத்தையர்கண் நிசழ்கின்ற காதல் நிலை குலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் (எ - று).

1. பின் முறையாக்கிய பெரும் பொருள் வ் துவை . தலைவியை முதன்

முறையாக மணஞ்செய்து கொண்டபின்னர் இரண்டாந்தாரமாக மணந்துகொள்ளப்

ட்ட மனைவி,

தொன்முறை மனைவி - முதன்மையாக மணந்து கொள்ளப் பெற்றமை to o தொன்றுதொட்டுவரும் மனையறவுரிமைக்குரிய தலைவி.

எதிர்ப்பாடு எதிர்பாராத வகையில் எதிர்ப்பட்டுக் க்ண்டுகொள்ளுதல் "இறந்த துணைய' என இளம்பூரணருரையிற்கண்ட பாடத்தினும் "இறந்தது கினை இ’ என கச்சினார்க்கினியருரையிற்கண்ட பாடமே பொருட் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது

2. "இறந்தது' என்றது. தலைவன், தன்னை மணந்துகொண்ட தொன் துறைமனைவி பின்முறைமனைவியாகிய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தையரொடு கூ டியொழுகிய செய்தியை. கினை இ-கிணைந்து.

3. ஆங்கட்கலங்கல்’ என்றது, அப்பரத்தையர்கள் நிகழ்கின்ற காதல் கின்ை தலைக் து அவர்களை iட்டு மீளுதலை,