பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் நூற்பா கங் ா.அக

- அவன்சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்

மகன்தா யுயர்புந் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி இயல்பாக லான,

இளம்பூரணம்: இதுவும் தலைமகட்குரிய கிளவி யுணர்த் சிற்று. மேல தற்கோர் புறனடை :

(இ ள் தலைவனது சோர்வு காத்தல் தலைமகட்குக் கடனாகலால் தன் மகனுக்குத் தாயாகிய காமக்கிழத்தி யுயர்புந் தன்னுயர்பாகும்; இருவருந் தலைமகன் பணித்த மொழிகோடல் இயல்பாகலான் ; என்றவாறு. '

சோர்வாவது ஒழுக்கத்திற்சோர்வு. அது பரத்தையிற்பிரிவு. அதனை மறையாது காமக்கிழத்தி யாற்றின் றலைமகற்குக் குறை பாடு வரும் என்பதனால், அவளை யுயர்த்தி யவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகாமை யேற்றுக் கோடல் வேண்டுமெனக் கூறுதலுந் தனக்கு இழிபு ஆகாது உயர்ச்சியாம் என்றவாறு, இது மேலதற்குக் காரணங் கூறிற்று. (ங்க)

நச்சினார்க்கினியம்: இதுவுந் தலைவி குணச் சிறப்புக் கூறு கின்றது.

(இ-ஸ்.) அவன் சோர்பு காத்தல் கடன்’ எனப்படுதலின்தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தால் தலைவற்கு இழுக்கம் பிறவா மற் பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலால், மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் - மகன் தாயாகிய

1. மகன் தாய்' என்றது, காமக் கிழத்தியை 'தன்' என்றது, தலைவியை , செல்வன்' என்றது, தலைவனை.

2. அவன் சோர்புகாத்தல்கடன்' என்பது, தொல்காப்பியனார் காலத்து வழங்கிய மூதுரையெனத் தெரிகின்றது.

'அவன் சோர்பு காத்தல் கடன்’ என்ற தொடர்ப்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்'

என வரும் திருக்குறள்ாகும்.